நியூசிலாந்து போகும் இந்திய அணி அறிவிப்பு: யுவராஜ்சிங்குக்கு இடம் இல்லை!
மும்பை: நியூசிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை.
இந்திய அணி ஜனவரி 19-ந் தேதி நியூசிலாந்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டி தொடரில் கலந்து கொள்கிறது. அங்கு 5 ஒரு நாள் போட்டியிலும், இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது.
இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

யுவராஜ்சிங் இடம் இல்லை
இந்த தொடரில் அதிரடி வீரர் யுவராஜ்சிங் தேர்வு செய்யப்படவில்லை.

அறிமுக வீரர்கள் ஈஸ்வர் பாண்டே, பின்னி
அறிமுக வீரர் ஈஸ்வர் பாண்டே ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டி அணியில் இடம்பிடித்துள்ளார். மற்றொரு அறிமுக வீரர் பின்னி ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஒரு நாள் போட்டிக்கான வீரர்கள்
டோணி, தவான், ரோகித் சர்மா. கோஹ்லி, ரகானே, ராயுடு. ரெய்னா, அஸ்வின், ரவீந்தர் ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, இஸாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, ஸ்டார்ட் பின்னி, வருண் ஆரோன்

டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள்
டோணி, தவான், முரளிவிஜய், புஜாரா, கோஹ்லி, ரோகித் சர்மா, ரகானே, ரவீந்தர் ஜடேஜா, ஜாகீர்கான், முகமது சமி, இஸாந்த் சர்மா, ராயுடு, புவனேஸ்வர் குமார், அஸ்வின், உமேஸ்யாதவ், விரித்திமான் சஹா, ஈஸ்வர் பாண்டே


Click it and Unblock the Notifications