Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் சிங் இருந்த போது தோனிக்கு கேப்டன் பதவியே கொடுத்திருக்கக் கூடாது.. வெடிக்கும் சர்ச்சை!

Recommended Video

தோனிக்கு கேப்டன் பதவியே கொடுத்திருக்கக் கூடாது... யுவராஜ் தந்தை சர்ச்சை கருத்து

மான்செஸ்டர் : இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கும் தோனி, அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தோனி குறித்து கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்து இருக்கிறார்.

என்என்ஐஎஸ் (NNIS Sports) என்ற நிறுவனத்திற்கு பேட்டி அளித்த யோக்ராஜ் சிங் தோனியை மிகவும் மோசமாக தாக்கிப் பேசி இருக்கிறார்.

தோனி மீது யுவராஜ் சிங்கின் தந்தைக்கு எப்போதும் கோபம் உண்டு. ஆனால், உலகக்கோப்பை தொடரில் முக்கியமான கட்டத்தில் தோனி ஆடி வரும் நிலையில் அவரை சீண்டி உள்ளார்.

யுவராஜ் சிங் ஓய்வு

யுவராஜ் சிங் ஓய்வு

யுவராஜ் சிங் சமீபத்தில் ஓய்வு பெற்றார். 2019 உலகக்கோப்பை தொடரில் ஆட வேண்டும் என்பது அவரின் கனவாக இருந்தது. ஆனால், அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரிலும் அவ.ருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வயதாகி விட்டதால், பீல்டிங்கிலும் பழைய வேகம் இல்லை. இனி அணியில் வாய்ப்பு கிடைக்காது என்ற நிலையில் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார். அப்போதே யுவராஜ் சிங்கின் தந்தை தோனியை தாக்கிப் பேட்டி கொடுத்தார்.

தோனி பிறந்தநாள்

தோனி பிறந்தநாள்

சமீபத்தில் தோனியின் பிறந்த நாள் வந்தது. அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், யுவராஜ் சிங் வாழ்த்து கூறவில்லை என சிலர் சுட்டிக் காட்டினர். இது சர்ச்சையானது.

தோனி ஓய்வு வதந்தி

தோனி ஓய்வு வதந்தி

இதனிடையே, தோனி உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என ஒரு வதந்தி கிளம்பியது. தன் ஓய்வு குறித்து எப்போதும் பேசாத தோனி இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்தார். சிலர் தான் உலகக்கோப்பை லீக் சுற்றுக்கு முன்பே கூட ஒய்வு பெற வேண்டும் என நினைக்கிறார்கள் என்றார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இந்த நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை மீண்டும் தோனியை தாக்கிப் பேட்டி கொடுத்து இருக்கிறார். யுவராஜ் சிங் அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தார், கேப்டனாக சரியான தேர்வாக இருந்தார். ஆனால், அணிக்குள் அவருக்கு பின் வந்த தோனிக்கு கேப்டன் பதவியை கொடுத்தார்கள் என்று தோனியை தாக்கிப் பேசினார். இது தேவை இல்லாத சர்ச்சையாக மாறி உள்ளது.

Story first published: Tuesday, July 9, 2019, 15:28 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+