Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது வேற லெவல்.. தோனியை கன்னாபின்னா என்று திட்டிய யுவராஜ் சிங் தந்தை அந்தர் பல்டி!

மும்பை : தோனியை திட்டி பேட்டி கொடுத்து வந்த யுவராஜ் சிங் தந்தை ஒரேடியாக பல்டி அடித்து, தோனியை புகழ்ந்துள்ளார்.

யுவராஜ் சிங் தந்தைக்கு முதலில் இருந்தே தோனியை பிடிக்காது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், சமீபத்தில் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார்.

அப்போது யோகராஜ் சிங் கோபமாக தோனி பற்றி விமர்சித்து பேட்டி கொடுத்தார். யுவராஜ் சிங் நீண்ட காலம் அணியில் ஆடாமல் இருந்ததற்கு காரணம் தோனி தான் என்றார். அத்தோடு நிற்கவில்லை.

தோனியை திட்டிய யோக்ராஜ் சிங்

தோனியை திட்டிய யோக்ராஜ் சிங்

யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர் ஆகியோரை அணியில் இருந்து தோனி நீக்கியதை கண்டித்து பேசினார். அவரை விட மூத்த வீரராக யுவராஜ் சிங் இருந்த போது அவருக்கு கேப்டன் பதவியை கொடுத்து விட்டார்கள் என்றார்.

அம்பதி ராயுடு ஓய்வுக்கு காரணம்

அம்பதி ராயுடு ஓய்வுக்கு காரணம்

மேலே சொன்னதில் கூட சிறிது உண்மை உள்ளது. ஆனால், அம்பதி ராயுடு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஓய்வு பெற்ற போது அதற்கு காரணம் தோனி தான். தோனி ஒரு சுயநலவாதி. ஒரு குப்பை என வாய்க்கு வந்தபடி திட்டி இருந்தார்.

வாய்ப்பு கொடுத்ததே தோனி

வாய்ப்பு கொடுத்ததே தோனி

அம்பதி ராயுடுவை சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் தேர்வு செய்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெற காரணமாக இருந்தவர் தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஓய்வுக்கு அவர் தான் காரணம் என திட்டி இருந்தார் யோக்ராஜ்.

தோல்விக்கு காரணம் தோனி

தோல்விக்கு காரணம் தோனி

அது மட்டுமின்றி, தோனி தான் 2015 மற்றும் 2019 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விகளுக்கு முக்கிய காரணம். கோலியை பழி தீர்க்க அப்படி செய்தார் என மீண்டும் கன்னாபின்னா பேட்டி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அந்தர் பல்டி

அந்தர் பல்டி

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அந்தர் பல்டி அடித்துள்ளார். "உலகக்கோப்பை தோல்விக்கு நான் தோனியை குற்றம் சொல்லவில்லை. அதை நான் சொல்லவே இல்லை. நீங்கள் தவறான கேள்வியை, தவறான நபரிடம் கேட்டுள்ளீர்கள்" எனக் கூறி கேள்வி கேட்டவரை மிரள வைத்துள்ளார்.

தோனி ரசிகர்

தோனி ரசிகர்

தற்போது தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடாமல், இரண்டு மாத ஓய்வு எடுத்துக் கொண்டு இராணுவத்திற்கு சென்றது குறித்து கேட்கப்பட்டது. அப்போது, சந்தேகமே வேண்டாம். தோனி நீண்ட காலமாக நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். அவர் ஒரு ஜாம்பவான். நானே ஒரு தோனி ரசிகர் தான் என்று கூறி வாயடைக்க வைத்தார்.

ஏன் பல்டி அடித்தார்?

ஏன் பல்டி அடித்தார்?

போன வாரம் வரை தோனியை கிழித்து, தோரணம் கட்டி தொங்க விட்ட யோக்ராஜ் சிங் திடீரென மாறி உள்ளார். இதன் பின்னணியில் யுவராஜ் சிங் இருப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Story first published: Friday, July 26, 2019, 12:36 [IST]
Other articles published on Jul 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+