வயசாகிடுச்சு.. முகத்துக்கு கிரீம் போடுங்க.. கிண்டல் செய்த யுவராஜை அசிங்கப்படுத்திய பும்ரா.. பகீர்!
டெல்லி: இன்ஸ்டாகிராமில் இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் பேசிக்கொண்டது பெரிய வைரலாகி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் அறிவித்தார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெறுகிறேன் என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பின் அவர் முழுக்க முழுக்க மீடியாக்களில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் யுவராஜ் தற்போது இன்ஸ்டாகிராமில் மீண்டும் வைரலாகி உள்ளார். பும்ராவுடன் அவர் இன்ஸ்டாவில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

என்ன செய்தார்
பும்ரா கிரிக்கெட் உலகில் பிரபலமானதில் இருந்து நிறைய விளம்பர படங்களில் நடிக்கிறார். அவர் சமீப காலமாக முக கிரீம் விளம்பரங்களிலும் அதிகம் நடிக்கிறார். முக்கியமாக முகப்பரு கிரீம் விளம்பரங்களில் அவர் நடித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு முகப்பருவை போக்க இதை பயன்படுத்துங்க என்று பும்ரா குறிப்பிட்டு இருந்தார்.

என்ன பதில்
இதில் பதில் அளித்த யுவராஜ், அதை நீதான் பயன்படுத்த வேண்டும். உனக்குத்தான் பரு அதிகமாக இருக்கிறது என்று கூறினார். இதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் பதில் அளித்த பும்ரா, யுவராஜ் நீங்கள் வயது தெரியாமல் இருக்க கிரீம் தேடுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். சீக்கிரம் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதில்தான் சர்ச்சையாகி உள்ளது.

யுவராஜ் வருத்தம்
இதற்கு யுவராஜ் கண்டிப்பாக வருந்தி இருப்பார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பும்ரா வேண்டுமென்றால் உலகில் தற்போது நம்பர் ஒன் பவுலராக இருக்கலாம். ஆனால் யுவராஜ் சிங் எல்லாம் லெஜெண்ட். அப்படி இருக்கும் போது அவரை எப்படி கிண்டல் செய்யலாம் என்று பலர் கேட்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் பும்ரா பேசியது சரிதான் என்றும் கூறியுள்ளனர்.

உண்மை என்ன
ஆனால் ஐபிஎல் போட்டியில் இவர்கள் இருவரும் இப்போது மும்பை அணிக்காகதான் விளையாடி வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் தற்போது நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது விளையாட்டாகத்தான் இருக்கும். பும்ரா பேசியதற்கு யுவராஜ் வருந்தி இருக்க மாட்டார் என்று பலர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications