For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவராஜ் சிங் அடித்த பிளாட் சிக்ஸ்.. வெறுத்துப் போன பாக். வீரர்.. கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

Recommended Video

யுவராஜ் சிங் அடித்த பிளாட் சிக்ஸ்.. வெறுத்துப் போன பாக். வீரர்-வீடியோ

பிராம்ப்டன் : கனடாவின் குளோபல் டி20 தொடரில் யுவராஜ் சிங் அடித்த சிக்ஸ் வைரல் ஆகி வருகிறது.

கனடாவில் நடக்கும் குளோபல் டி20 தொடரில் டொராண்டோ நேஷனல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் யுவராஜ் சிங்.

அந்த அணியின் முதல் போட்டியில் நிதானமாக ஆடி சொதப்பிய யுவராஜ் சிங், அடுத்த போட்டியில் கலக்கலாக ஆடினார்.

ஓவர்கள் குறைப்பு

ஓவர்கள் குறைப்பு

எட்மாண்டன் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டொரண்டோ அணி முதலில் பந்துவீசியது. மழை காரணமாக போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது. எட்மாண்டன் அணி சுமாரான துவக்கம் பெற்றாலும், அடுத்து அதிரடியாக ஆடியது.

யுவராஜ் அணிக்கு சவால்

யுவராஜ் அணிக்கு சவால்

19 ஓவர்களில் 191 ரன்கள் குவித்து, யுவராஜ் அணிக்கு சவால் விடுத்தது. டொரண்டோ அணியின் துவக்க வீரர்கள் தாமஸ் 8 ரன்கள் எடுத்தும், மெக்லியாட் டக் அவுட் ஆகியும் அதிர்ச்சி அளித்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அடுத்து ஜோடி சேர்ந்த கிளாசன், யுவராஜ் சிங் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். கிளாசன் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.

மூன்று சிக்ஸர்கள் அடித்தார்

யுவராஜ் சிங் தன் ஆட்டத்தில் மூன்று சிக்ஸர்கள் அடித்தார். அதில் ஒரு சிக்ஸர் தரையோடு ஒட்டியது போல பிளாட்டாக அடித்தார். அது ஃபோர் ஆக மாறும் என நினைத்தில் அடித்த வேகத்தில் நேராக பவுண்டரியை தாண்டிச் சென்றது அந்த சிக்ஸ்.

ஷதாப் கான் வெறுத்தார்

ஷதாப் கான் வெறுத்தார்

பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் ஷதாப் கான் பந்தில் தான் அந்த சிக்ஸ் அடிக்கப்பட்டது. யுவராஜ் சிங்ஸ் ஷதாப் கானின் முந்தைய ஓவரிலும் சிக்ஸ் அடித்து இருந்தார். மீண்டும் சிக்ஸ் அடித்ததும் வெறுத்துப் போனார் ஷதாப் கான்.

டொரண்டோ அணி வெற்றி

டொரண்டோ அணி வெற்றி

இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் மன்ப்ரீத் கோனி 12 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். டொரண்டோ அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த டொரண்டோ அணி இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

அதே போல, கனடாவில் இருக்கும் இந்தியர்கள் யுவராஜ் சிங்கின் முதல் போட்டியை அதிகம் எதிர்பார்த்து இருந்தனர். எனினும், அந்தப் போட்டியில் யுவராஜ் சிங் ஆடிய டெஸ்ட் ஆட்டத்தை பார்த்து எரிச்சல் அடைந்தனர். இரண்டாவது போட்டியில் யுவராஜ் சிங் மூன்று சிக்ஸர்கள் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததால், அதை கொண்டாடித் தீர்த்தனர்.

Story first published: Sunday, July 28, 2019, 19:34 [IST]
Other articles published on Jul 28, 2019
English summary
Yuvraj Singh hit a flast six out of Pakistan spinner Shadab Khan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+