Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"25 வருஷமா உங்க அசிஸ்டெண்ட்டா தானே இருக்கேன்".. கங்குலி அழைத்தவுடன் யுவராஜ் சிங் சொன்னது இதுதான்!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சவுரவ் கங்குலியும் யுவராஜ் சிங்கும் ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக, அந்த அணியின் பேட்டிங் மற்றும் உதவிப் பயிற்சியாளராக யுவராஜ் சிங் பொறுப்பேற்றுள்ளார். கங்குலி தன்னை இந்தப் பதவிக்கு அழைத்த சுவாரஸ்யமான தருணத்தை யுவராஜ் சிங் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

"ஒருநாள் தாதா (கங்குலி) என்னை அழைத்தார். 'எனக்கு உதவிப் பயிற்சியாளராக இருக்க வருகிறாயா?' எனக் கேட்டார். உடனே நான் சற்றும் தயங்காமல், 'கடந்த 25 வருஷமாகவே நான் உங்க அசிஸ்டெண்டாகத்தானே வேலை பார்க்கிறேன். அதனால் இந்த முறையும் அதே வேலையைச் செய்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை' என்று சிரித்தபடி சொன்னேன்" என யுவராஜ் தெரிவித்தார்.

Yuvraj Singh Joins Sourav Ganguly At Delhi Capitals As Assistant Coach With Humorous Response

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாகத் தான் சில இளம் வீரர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து வந்ததாகவும், இப்போது ஒரு முழு அணியின் சூழலில் பணியாற்றுவது புதுவித அனுபவத்தையும் உற்சாகத்தையும் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார். கங்குலியுடனான நட்பு குறித்து யுவராஜ் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

"டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களை எப்படி ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதை தாதாவிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். நான் அறிமுகமான காலத்தில், வெளிநாடுகளிலும் நம்மால் தொடர்களை வெல்ல முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் ஊட்டினார். கிரிக்கெட் நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்த அவர், எப்போதுமே எனக்கு ஒரு மூத்த அண்ணன் மாதிரிதான்" என்றார்.

"வெஸ்ட் இண்டீசுக்கே இப்படி என்றால் ஆஸ்திரேலியா வந்தால் என்ன செய்வாங்களோ".. பவுலர்களை வெளுத்த கைஃப்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அந்த நீண்ட நாள் ஏமாற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரவே தாங்கள் வந்துள்ளதாக யுவராஜ் சிங் தெரிவித்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர். பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவது முதல் இலக்காக இருந்தாலும், கோப்பையை வெல்வதே தங்களின் முதன்மை லட்சியம் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.

Story first published: Thursday, October 15, 2026, 17:45 [IST]
Other articles published on Oct 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+