For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போற போக்கில கேக் கொடுக்க மறந்துடாதீங்க புரோ... கம்பீருக்கு வாழ்த்து சொன்ன யுவராஜ்

டெல்லி : முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரரும் லோக் சபா எம்பியுமான கவுதம் கம்பீரின் 39வது பிறந்ததினம் இன்று.

இதையொட்டி முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கம்பீருக்கு வாழ்த்துக் கூறியதுடன் பிறந்தநாள் கேக்கை அளிக்குமாறு அவரிடம் கேட்டுள்ளார்.

கவுதம் கம்பீரின் பிறந்தநாள்

கவுதம் கம்பீரின் பிறந்தநாள்

முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரரும் லோக் சபா உறுப்பினருமான கவுதம் கம்பீர் தன்னுடைய 39வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

10,324 ரன்கள்

10,324 ரன்கள்

கவுதம் கம்பீர் தனது கிரிக்கெட் கேரியரில் 242 சர்வதேச போட்டிகளில் விளையாடி 10,324 ரன்களை குவித்துள்ளார். கடந்த 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலக கோப்பை தொடர்களில் அங்கமாக இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். கடந்த 2012ல் ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை பரிசளித்துள்ளார்.

யுவராஜ் சிங் வாழ்த்து

யுவராஜ் சிங் வாழ்த்து

இந்நிலையில் கம்பீரின் 39வது பிறந்ததினத்தையொட்டி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் டிவிட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அவரது வாழ்க்கையில் பல வெற்றிகளை அடையவும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையை அளிக்கவும் வாழ்த்து தெரிவித்த யுவராஜ் பிறந்தநாள் கேக்கை அளிக்கவும் கேட்டுள்ளார்.

அனைவருக்கும் உத்வேகம் அளிக்க வேண்டுகோள்

அனைவருக்கும் உத்வேகம் அளிக்க வேண்டுகோள்

இதேபோல முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கம்பீருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கம்பீர் தன்னுடைய செயல்களால் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கவும் அனைவரையும் பெருமை கொள்ளவும் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிசிசிஐ வாழ்த்து

பிசிசிஐ வாழ்த்து

இதேபோல கேகேஆர் அணியும் பிசிசிஐயும் தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளது. அவரது சாதனைகளை பிசிசிஐ பட்டியலிட்டு வாழ்த்து கூறியுள்ளது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், பிரபலங்களும் கம்பீருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:10 [IST]
Other articles published on Oct 14, 2020
English summary
Gautam Gambhir turned 39 and wishes poured in from the cricket fraternity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+