
கெயிலா? ஏலியனா?
மும்பையில் யுவராஜ் சிங் ஒரு ஷாப்பிங் மாலில் ஏலியன் பொம்மை ஒன்றை பார்த்துள்ளார். அந்த பொம்மையை பார்க்க சற்றே வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் போல இருந்துள்ளது. உடனே அந்த பொம்மையிடம் கேள்வி கேட்பதைப் போல ஒரு புகைப்படம் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மும்பையில் என்ன செய்றீங்க?
கூடவே, அந்த பதிவில் கிறிஸ் கெயிலை கேலி செய்யும் வகையில் கெயிலின் செல்லப் பெயரான "காகா"வை குறிப்பிட்டுள்ளார். "காகா! மும்பையில் என்ன செய்றீங்க? நீங்க துபாயில் இருப்பீங்கன்னு நினைச்சேன்.." என அந்த ஏலியன் பொம்மையிடம் கேட்பது போல பதிவிட்டுள்ளார்.

துபாயில் இருக்கும் கெயில்
கிறிஸ் கெயில் தற்போது ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீகில் ஆடி வருகிறார். அதன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நடந்து வருகிறது. கிறிஸ் கெயில் அங்கு தான் தற்போது இருக்கிறார். அதைத் தான் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் கெயில்.

ஐபிஎல் தொடரில் உருவான நட்பு
கடந்த சீசனில் யுவராஜ் சிங், கிறிஸ் கெயில் இருவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஒன்றாக ஆடினர். அந்த நட்பை ஒட்டியே யுவராஜ் சிங், உரிமையுடன் கிறிஸ் கெயிலை கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications