Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி vs யுவராஜ் சிங் - 2 வீரர்களில் யாரை ரொம்ப பிடிக்கும்.. ரெய்னா நச் பதில்

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் சுரேஷ் ரெய்னா. தோனியை தல என்று ரசிகர்கள் அழைத்தால் ரெய்னாவை சின்ன தல என்றுதான் ரசிகர்கள் போற்றுவார்கள். தோனியின் உற்ற நண்பனாக சகோதரராக ரெய்னா விளங்கி இருக்கிறார்.

இந்த சூழலில் ரெய்னா தோனிக்கு இடையே ஒரு சின்ன விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஐபிஎல் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரெய்னா அதிரடியாக சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ரெய்னாவுக்கு தோனியை தெரிவதற்கு முன்பே யுவராஜ்சிங்கை நன்கு தெரியும். ஏனென்றால் யுவராஜ் சிங் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் ரெய்னா யுவராஜ் மீது அதிக மரியாதையும் அன்பும் கொண்டு இருந்தார்.

yuvraj singh ms dhoni suresh raina

இந்திய அணியில் ரெய்னா ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் விளையாடும் வரை தோனியை விட யுவராஜ் மீது தான் நல்ல மதிப்பு கொண்டு இருந்தார்.யுவராஜ் உடன் சுற்றி திரிவது என ரெய்னா ஒரு ஜூனியர் வீரராக நல்ல நட்பு கொண்டு திகழ்ந்தார். ஆனால் ஐபிஎல் தொடருக்கு பிறகு தான் தோனி மீதான நட்பு ரெய்னாவுக்கு அதிகம் உண்டானது.

இந்து சூழலில் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் எடுத்த பேட்டி தோனி ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. இதனால் யுவராஜ் பெரியவரா? தோனி பெரியவரா என்று ஒரு சண்டை நடந்து வருகிறது. யுவராஜ் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுத்ததே தோனி தான் என்றும் யோக்ராஜ் கருத்தை முன்வைத்து சிலர் பேசுகின்றனர். ஆனால் யுவ்ராஜ் அணியில் நீடித்தது தோனியின் தயவால் தான் என்று தோனி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா விடம் உங்களுக்கு யுவராஜ் பிடிக்குமா தோனி பிடிக்குமா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதிலை தற்போது பார்க்கலாம். சமூக வலைத்தளத்தில் திஸ் ஆர் டேட் என்ற ஒரு கேம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யார் விருந்தினராக வந்தாலும் இரண்டை சொல்லி அதிலிருந்து ஒன்றைக் தேர்ந்தெடுங்கள் என்று கூறுவார்கள்.

அதில் ரெய்னாவிடம் ஹசியா ரஸூலா என கேள்வி கேட்கப்பட்டதற்கு ரசூல் என பதில் அளித்தார். போலார்டா, ரஸிலா என கேள்வி கேட்கப்பட்டதற்கு போலார்ட் என ரெய்னா பதில் அளித்தார். போலார்டா யுவராஜ் சிங்கா என கேள்வி கேட்கப்பட்டதற்கு யுவராஜ் சிங் என சுரேஷ் ரெய்னா பதில் அளித்தார். யுவராஜ் சிங்னா மேக்ஸ்வெல்லா என கேள்வி கேட்கப்பட்டதற்கு ரெய்னா மீண்டும் யுவராஜ் சிங் என பதில் அளித்தார்.

யுவராஜ் சிங்கா, ஹென்ரிச் கிளாசனா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு, மீண்டும் ரெய்னா யுவராஜ் சிங் தான் என்று கூறியுள்ளார். யுவராஜ் சிங்கா, நிக்கோலாஸ் பூராணா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு, மீண்டும் ரெய்னா யோசிக்காமல் யுவராஜ் சிங் தான் என்று பதில் கூறினார். தொடர்ந்து யுவராஜ் சிங்கா ரிங்கு சிங்கா என கேள்வி கேட்கப்பட்டதற்கு மீண்டும் யுவராஜ் சிங் என பதில் அளித்தார்.

தொடர்ந்து யுவராஜ் சிங் என ரெய்னா பதில் அளித்ததன் மூலமே அவர் யுவராஜ் சிங் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். கடைசியில் தொகுப்பாளர் யுவராஜ் சிங்கா தோனியா என்று கேட்டு சிரித்தார். அதற்கு ரெய்னா கொஞ்சம் கூட யோசிக்காமல் இதற்கு நான் தோனி என்றுதான் பதில் சொல்வேன் என கூறினார். இதை அடுத்து அங்கு இருந்த அனைவரும் சிரித்தனர்.

அதற்கு ரெய்னா, கடைசியில் நீங்கள் தோனியை வைத்து விட்டீர்கள் என்று கமெண்ட் அடித்தார். ரெய்னாவின் இந்த பேட்டி தோனி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. பலரும் இதை டிரெண்ட் செய்து என்னதான் ரெய்னாவுக்கு யுவராஜ் சிங் பிடித்தாலும் எப்போதுமே அவருக்கு தோனி தான் நெருக்கமானவர் என்று கருத்து கூறி வருகின்றனர்.

Story first published: Wednesday, September 4, 2024, 22:08 [IST]
Other articles published on Sep 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+