Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ் சிங் முடிவு… விரைவில் வெளியாகிறது அறிவிப்பு

மும்பை: ஆல்ரவுண்டரும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மென் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு உலக கோப்பையில் அவரது பங்களிப்பு மறக்க முடியாத ஒன்று. 3 முறை உலக கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியை காலிறுதியோடு வீட்டுக்கு அனுப்பினார் யுவராஜ் சிங்.

அவரது அதிரடி ஆட்டத்தால்தான் சாதிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். கிரிக்கெட் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத போட்டி.

கடைசி போட்டி

கடைசி போட்டி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்தார். கடைசியாக இந்திய அணியில் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் பங்கேற்றார். அதன்பின் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

கைகொடுக்காத ஐபிஎல்

கைகொடுக்காத ஐபிஎல்

ஐபிஎல் போட்டியிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார். பின்னர் அந்த அணியில் இருந்தும் கழற்றிவிடப்பட்டு இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். சில போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஓய்வு பெற முடிவு

ஓய்வு பெற முடிவு

இந் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுதொடர்பாக பிசிசிஐ அமைப்பிடம் பேசி வருவதாகவும், கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியோடு வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகலில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அறிவிக்கிறார் யுவராஜ்

அறிவிக்கிறார் யுவராஜ்

இது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறப்படுவதாவது: முதல் தர கிரிக்கெட் மற்றும் சர்வ தேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற யுவராஜ் சிங் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் பிசிசிஐ அமைப்பிடம் பேசி அறிவிக்க இருக்கிறார்.

Story first published: Sunday, May 19, 2019, 18:14 [IST]
Other articles published on May 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+