Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி பிச்சைதான் எடுப்பார் என்று சாபமிட்ட தனது தந்தை கருத்துக்கு யுவராஜ்சிங் பதில்!

டெல்லி: டோணி குறித்து தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறிய கருத்துகளுக்கு, பதிலளித்துள்ள யுவராஜ்சிங் தந்தை கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

டோணி குறித்து மோசமாக கருத்து தெரிவித்து பேட்டியளித்திருந்தார் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ்சிங். டோணி ஆணவக்காரர், பிச்சைதான் எடுப்பார் என்பது போன்ற கருத்துகளை கூறியிருந்தார். இதுகுறித்து டிவிட்டரில் பதில் கொடுத்துள்ளார் யுவராஜ்சிங்.

Yuvraj Singh reacts after his father Yograj Singh hits out at MS Dhoni

மீடியாக்களில் வெளியான செய்திக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் டோணி தலைமையில் விளையாட விருப்பம் கொண்டுள்ளேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேன்.

டோணியை சந்தித்து அவர் தந்தையானதற்கு வாழ்த்துகளை தெரிவிக்க நான் காத்துக் கொண்டுள்ளேன். இவ்வாறு யுவராஜ்சிங் கூறியுள்ளார்

ஏற்கனவே ஒருமுறை யோக்ராஜ் இவ்வாறு டோணி மீது சேற்றை வாரி இறைத்தபோதும், யுவராஜ்சிங் அந்த விவகாரத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 7, 2015, 18:11 [IST]
Other articles published on Apr 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+