தம்பி..! நீ யாரு.. எப்டி டைப், டைப்பா பேசுவேன்னு தெரியும்..! அக்தரை அலற விட்ட நம்ம ஊரு நாயகன்
Recommended Video
மும்பை: ஆர்ச்சர் விவகாரத்தில், பாக். முன்னாள் வீரர் சோயிப் அக்தரின் டுவீட்டுக்கு யுவராஜ் சிங் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
ஆஷஸ் 2வது போட்டி டிராவில் முடிந்தது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 258 ரன்களையும் ஆஸ்திரேலியா 250 ரன்களையும் அடித்தன. 2வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து, பென் ஸ்டோக்ஸின் அபாரமான சதத்தால், 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
48 ஓவரில் 267 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா, 47.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. இதையடுத்து 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. போட்டியில் முதல் இன்னிங்ஸில், ஆர்ச்சர் வீசிய 77வது ஓவரின் 5வது பந்தில் ஸ்மித்தின் கழுத்தில் அடிபட்டது.

அலறி விழுந்த ஸ்மித்
நிலை குலைந்து கீழே விழுந்தார் ஸ்மித். பொதுவாக இதுபோன்ற தருணங்களில் முதல் ஆளாக ஓடிச் சென்று நலம் விசாரிப்பது அந்த பவுலராக இருக்கும். ஆனால் ஆர்ச்சரோ, ஸ்மித்தை கண்டு கொள்ளாமல் சிரித்துக் கொண்டே நகர்ந்து சென்றார்.

வீடியோ வைரல்
ஸ்மித் வலியால் கதறிய போது, பட்லரும் ஆர்ச்சரும் சிரித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. அதை கண்ட ரசிகர்கள், ஆர்ச்சரை கடுமையாக விமர்சித்தனர். பாக். முன்னாள் வீரர் அக்தரும் இது குறித்து டுவீட்டியிருந்தார். நான் அந்த இடத்தில் இருந்தால் முதலில் சென்று விசாரிக்கும் நபர் நான் தான் என்று தெரிவித்திருந்தார்.

அக்தர் பதில்
இதற்கு தான் இப்போது யுவராஜ் சிங் செமத்தியாக பதிலடி தந்திருக்கிறார். அக்தரின் அந்த டுவீட்டுக்கு யுவராஜ் சிங் கிண்டலாக பதிலளித்துள்ளார். அந்த டுவீட்டில் யுவி. கூறியிருப்பதாவது:
யுவராஜ் சிங் பதிலடி
ஆமாம்.. நீங்கள் சொல்வது ரொம்ப சரிதான் அக்தர். பேட்ஸ்மேனுக்கு அடிபட்டால் உடனடியாக அவரை நலம் விசாரித்திருக்கிறீர்கள். ஏனென்றால், பேட்ஸ்மேன் நலமாக இருப்பதை உறுதி செய்துவிட்டு மேலும் சில பவுன்சர்களை வீசுவதற்காக போட்டு தாக்குவீர்கள்... அதற்கு தானே? என்று யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிலடி டுவீட் வைரலாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications