Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டத்தின் பாதியிலேயே காணாமல் போன யுவராஜ் சிங்…! என்ன நடந்தது…? ரசிகர்கள் ஷாக்..!

டொராண்டோ: கனடா டி 20 லீக் தொடரில் பேட்டிங் போது திடீரென மைதானத்தை விட்டு வெளியேறியது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் இருந்து ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங். பின்னர் பிசிசிஐயிடம் அனுமதி பெற்று குளோபல் கனடா டி20 லீக் தொடரில் ஆடிவருகிறார்.

கனடா டி20 லீக் தொடரில் ஆடும் டொரண்டோ நேஷனல்ஸ் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். ஐபிஎல்லில், சில ஆண்டுகளாக பார்மின்றி சொதப்பிய யுவராஜ் சிங், கனடா டி20 லீக்கில் அபாரமாக பேட் செய்து வருகிறார்.

திணறல் யுவி.

திணறல் யுவி.

ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே அதிரடியாக ஆடமுடியாமல் திணறினார் யுவராஜ். ஆனால் கனடா டி20 லீக்கில் சிறப்பாக ஆடி வருகிறார். பேட்டிங் மட்டும் இல்லாமல் பீல்டிங்கிலும் கலக்கி வருகிறார்.

அசத்தல் கேப்டன்ஷிப்

அசத்தல் கேப்டன்ஷிப்

பேட்டிங், பீல்டிங்கில் மட்டுமல்லாமல் யுவராஜ் சிங் கேப்டன்சியிலும் அசத்தி வருகிறார். இந்நிலையில், மாண்ட்ரீயல் டைகர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 137 ரன்கள் என்ற இலக்கை டொரண்டோ நேஷனல்ஸ் அணி விரட்டியது.

கூக்ளி பந்தில் யுவி.

கூக்ளி பந்தில் யுவி.

அப்போது 5ம் வரிசையில் பேட் செய்ய வந்தார் யுவராஜ் சிங். அப்போது, பவாத் அகமது வீசிய கூக்ளி பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். அப்படி செய்ய முயலும் போது முதுகில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

அவஸ்தை

அவஸ்தை

தொடர்ந்து வலியுடன் அவஸ்தைக்கு உள்ளானார் யுவராஜ் சிங். அதனால் பேட்டிங் செய்யாமல் உடனடியாக வெளியேறினார். எனினும் இலக்கு எளிது என்பதால் டொரண்டோ அணி அழகாக வெற்றி பெற்றது.

Story first published: Monday, August 5, 2019, 21:25 [IST]
Other articles published on Aug 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+