மும்பை : நாட்டுப்பற்று காரணமாக இந்திய அணி உலக கோப்பையை வெல்லலாம் என நான் சொன்னாலும் இந்திய அணிக்கு பல பிரச்சனைகள் இருப்பதாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான அணியை தரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது.

ஆனால் இந்திய அணி இதுவரை பிளேயிங் லெவனை உறுதி செய்யவில்லை. இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய யுவராஜ் சிங் உலக கோப்பை தொடரில் நாம் வெல்ல வேண்டும் என்றால் அணியில் இருக்கும் சில பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என கூறியுள்ளார். நான் இந்திய அணி என்பதால் இந்தியா உலகக் கோப்பையில் வென்று விடுவோம் என சொல்லி விடுவேன்.
ஆனால் இந்திய அணியின் நடு வரிசையில் பல பிரச்சனைகள் இருக்கிறது. இதற்கு காரணம் வீரர்களின் காயம் தான் இந்திய அணியில் இருக்கும் சிக்கல்கள் தீராவிட்டால் நிச்சயமாக நாம் தடுமாறுவோம். அதுவும் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் நிச்சயம் திணறுவோம். நெருக்கடியான ஆட்டத்தில் தயவுசெய்து பரிசோதனை முயற்சியை செய்யாதீர்கள்.
கிரிக்கெட்டில் தொடக்க வீரர் செய்யும் பணியை விட நடு வரிசையில் விளையாடும் வீரருக்கு வேண்டிய திறமை என்பது நிச்சயம் வித்தியாசமானது.தற்போது உள்ள இந்திய அணியில் நடு வரிசையில் விளையாடக்கூடிய வீரர்கள் என யாராவது இருக்கிறார்களா? நிச்சயமாக அது கேள்வி குறிதான்.ஏனென்றால் நமது நடுவரிசை இன்னும் தயாராகவில்லை. எனவே இந்திய அணி யாரேனும் ஒரு வீரரை தயார் செய்ய வேண்டும்.
உங்களுடைய தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் நடுவரிசையில் பார்ட்னர்ஷிப் அமைக்க.உங்களுக்கு ஒரு வீரர் வேண்டும் பேட்ஸ்மேன் என்பது ஆடுகளத்தில் நின்று விட்டு உடனடியாக அடித்த ஆட முடியாது. அவர் அழுத்தத்தை கையாள வேண்டும் சில பந்துகளை விட வேண்டும். அதன் பிறகு பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் நிச்சயமாக இது கடினமான வேலை அதற்கு ஏற்ற அனுபவம் நிறைந்த வீரர் ஒருவர் இருக்க வேண்டும் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.