Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பக்கத்துவீட்டுக்காரருடன் சண்டை: யுவராஜ் சிங்கின் தந்தை கைது

Yuvraj Singh's father arrested by Panchkula police
சன்டிகர்: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் ஹரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங். முன்னாள் கிரிக்கெட் வீரர். அவர் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் வசித்து வருகிறார். யுவராஜின் அம்மா யோக்ராஜின் முதல் மனைவி ஆவார். யுவராஜின் அம்மா யோக்ராஜை விட்டு விலகி மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்சனை செய்ததற்காக போலீசார் யோக்ராஜை கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

அவர் முன்னதாக பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டு சொத்து விஷயத்தில் மோசடி செய்ததற்காக யோக்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

யுவராஜ் சிங்கிற்கு முன்னாள் பந்துவீச்சாளரான யோக்ராஜ் தான் பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது.

Story first published: Monday, August 25, 2014, 15:42 [IST]
Other articles published on Aug 25, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+