Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் சிங் போட்ட போட்டோ.. அடிபம்ப்புல தண்ணீர் பிடிக்க நிக்கிற மாதிரியே இருக்கு!

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒரு சூப்பர் போட்டோவை பகிர்ந்துள்ளார். "அந்தக் காலத்துல நாங்கெல்லாம் எப்படி இருந்தோம் தெரியுமா".. ரக போட்டோதான் அது.. ஆனால் பல செய்திகளை அது வெளிப்படுத்துகிறது.

Recommended Video

Sachin Tendulkar's rare bowling records

இந்திய அணி வீரர்களில் யுவராஜ் சிங் ஒரு ராக் ஸ்டார்.. ஜாலியானவர். அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகக் கூடியவர். தோனி தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது அதில் முக்கியப் பங்காற்றியவர். புற்று நோய் தாக்கியபோது மனம் உடையாமல் போராடி மீண்டு வந்தவர்.

தற்போது ஓய்வு பெற்று விட்ட யுவராஜ் சிங் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பழைய நினைவுகளை கிளறி விடுவது போல அந்தப் புகைப்படம் உள்ளது.

போன் பூத்தில் வீரர்கள்

போன் பூத்தில் வீரர்கள்

தற்போது யுவராஜ் சிங் ஒரு போட்டோவைப் போட்டுள்ளார். அது ஏதோ மேட்ச்சுக்காக வீரர்கள் கிளம்பிச் செல்லும் காட்சி. வீரர்களிடம் பெரிய பெரிய பேக்குகள் உள்ளன. யூனிபார்மில் உள்ளனர். தொலைபேசி பூத்துகளில் நின்றபடி போனில் பேசிக் கொண்டுள்ளனர். ஆசிஷ் நெஹ்ரா, வீரேந்திர ஷேவாக், வி.வி.எஸ். லட்சுமண் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உள்ளனர்.

செல்போன் இல்லாத காலம்

செல்போன் இல்லாத காலம்

இந்தப் போட்டோவைப் போட்டுள்ள யுவராஜ் சிங், எங்க வீட்டில் மொபைல் போன் கொடுக்கலையே என்று வருத்தப்படுவோருக்காக இந்த புகைப்படம்.. என்று கேப்ஷன் போட்டுள்ளார் யுவராஜ்சிங். செல்போன்கள் இல்லாத காலம் அது. அதனால்தான் இந்த வீரர்கள் ஆளுக்கொரு பூத்துக்குள் புகுந்து தங்களது குடும்பத்தினருக்குப் போன் போட்டு பேசிக் கொண்டுள்ளனர். அதுவும் யுவராஜ் சிங் குட்டி டைரியைப் பார்த்து நம்பரை டயல் செய்வது போல தெரிகிறது.

ஆனால் உண்மை

ஆனால் உண்மை

யுவராஜ் சிங்கின் இந்தப் புகைப்படம் இந்தக் காலத்து வீரர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. அடடே நாமெல்லாம் இப்படி ஒரு நாள் கூட பூத்துக்குப் போய் போன் செய்ததே இல்லையே என்று ஆச்சரியப்படுவார்கள். காரணம் இப்போது ஒவ்வொரு வீரரின் கையில் டிசைன் டிசைனாக மொபைல் போன் உள்ளது. அதை விட முக்கியமாக வீடியோ காலில் பேசும் வசதி இருக்கிறது. ஆனால் அப்பெல்லாம் அப்படியெல்லாம் இல்லை.

யுவராஜ் சிங்கின் ஜாலி விளையாட்டு

யுவராஜ் சிங்கின் ஜாலி விளையாட்டு

சமீபத்தில் யுவராஜ் சிங் ஒரு ஜாலியான விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். பேட்டின் சைடில் வைத்து பந்தை அடிக்கும் விளையாட்டு. அதில் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் ஆகியோரையும் சவாலுக்குக் கூப்பிட்டிருந்தார். சச்சினும் கலந்து கொண்டார். அதுவும் எப்படி கண்ணைத் துணியால் கட்டிக் கொண்டு அடித்தார். அடடா என்று ஆச்சரியப்பட்ட சமயம் பார்த்து லேசான துணியைக் கட்டிக் கொண்டு ஏப்ரல் பூல் செய்தார்.

Story first published: Monday, May 25, 2020, 15:53 [IST]
Other articles published on May 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+