இன்று ரஜினிக்கு மட்டும் அல்ல இவருக்கும் பர்த்டே: ட்விட்டரில் டிரெண்டாகும் யுவி
டெல்லி: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ட்விட்டரில் #HappyBirthdayYuvi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தலைவர்கள், சக கலைஞர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் ரஜினி மட்டும் அல்ல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 2011ம் ஆண்டு இந்திய உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய யுவியின் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக மட்டுமே உள்ளது.

கிம் ஷர்மா
பாலிவுட் நடிகை கிம் ஷர்மாவும் யுவராஜ் சிங்கும் தீவிரமாக காதலித்தனர். 4 ஆண்டுகள் காதலித்த அவர்கள் 2007ம் ஆண்டில் பிரிந்துவிட்டனர். யுவராஜின் அம்மா ஷப்னமுக்கு கிம்மை பிடிக்காததால் அவர்களின் காதல் முறிந்துவிட்டதாம்.

தீபிகா படுகோனே
யுவராஜ் சிங்கும் தீபிகா படுகோனேவும் சில காலம் காதலர்களாக வலம் வந்தனர். அதன் பிறகு தீபிகா நடிகர் ரன்பீர் கபூருடன் சென்றுவிட்டார்.

ப்ரீத்தி ஜிந்தா
யுவியும், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் தாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறியபோதிலும் அவர்களுக்கு இடையே காதல் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

ரியா, ரைமா சென்
யுவராஜ் பாலிவுட் நடிகை ரைமா சென்னையும் அவரது தங்கை ரியா சென்னையும் ஒரு காலத்தில் காதலித்தார். முதலில் அக்காவை காதலித்த அவர் பின்னர் தங்கை மீது காதல் கொண்டார்.

மினிஷா லம்பா
யுவராஜ் பாலிவுட் நடிகை மினிஷா லம்பா, சூப்பர் மாடல் ஆன்ச்சல் குமார் ஆகியோரையும் காதலித்தார். இவர்கள் தவிர வேறு சில நடிகைகளுடனும் யுவியின் பெயர் அடிபட்டது.

ட்விட்டர்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவராஜுக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் #HappyBirthdayYuvi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications