For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெய்லு கெய்லு.. இந்தியில் ஃபெயிலு ஃபெயிலு.. கலாய்த்த யுவராஜ்.. கலங்கிய டிவிட்டர்!

பஞ்சாப் : பிரபல மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயிலுக்கு யுவராஜ்சிங் ஹிந்திக் கற்று கொடுக்க, அவர் சொதப்பிய வீடியோவை யுவராஜ் சிங் வெளியிட்டுள்ளார்.

இரண்டு வரிகள் கெயிலுக்கு கற்றுக்கொடுக்கப்ப்டட நிலையில், முதல் பகுதியை சிறப்பாக பேசிய அவர், இரண்டாவது பகுதியில் சொதப்பினார்.

Yuvraj Singh Shares Funny Video Of Chris Gayle

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஒத்தி வைக்கப்ப்டடுள்ள ஐபிஎல் 2020 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கிறிஸ் கெயில் களமிறங்கி ஆடவிருந்தார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். எப்போதும், சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் சொந்தக்காரரான கெயில், தான் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன், தன்னை சூழ்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் வல்லவர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் விளையாடவுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் இந்திய ஆட்டக்காரர் யுவராஜ் சிங், தற்போது கிறிஸ் கெயில் குறித்த வீடியோ ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள யுவராஜ் சிங், தன்னுடைய காலத்தில் பல்வேறு சிறப்பாக தருணங்களை ரசிகர்களுக்கு பரிசளித்தவர். சமீபத்தில் துவங்கப்பட்டு கொரோனா வைரஸ் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பாதுகாப்பு உலக தொடர் 2020ல் பங்கேற்று ஆடினார். இந்த தொடரில் இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பங்கேற்று ஆடவிருந்தன.

Yuvraj Singh Shares Funny Video Of Chris Gayle

இந்நிலையில், யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள வீடியோவில், கிறிஸ் கெயிலுக்கு ஹிந்தி கற்றுக்கொடுக்கப்பட்டது. அதில் தன்னுடைய கைவிரல்களை நீட்டி, ஹீரோக்களை போல கெயில் இரண்டு டயலாக்குகளை பேச முற்பட்டார். அதில் முதல் டயலாக்கில் வெற்றியும் பெற்றார். ஆனால் இரண்டாவது... அதுதாங்க சொதப்பல். ஆனாலும் சிரித்து மழுப்பி, தன்னுடைய தோல்வியை அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த வீடியோவை யுவராஜ் சிங், சிரிப்பு எமோஜிகளுடன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

Story first published: Sunday, March 15, 2020, 19:35 [IST]
Other articles published on Mar 15, 2020
English summary
Yuvraj Singh posted a funny video of Chris Gayle on social media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+