
யுவராஜ் சிங் பேட்டி
ஆனால், யுவராஜ் சிங் இத்தனை வெறியாகும் படி அன்று ஆண்ட்ரூ பிளின்டாப் என்ன தான் சொன்னார்? என்பது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி யுவராஜ் சிங் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பிளின்டாப் என்ன வார்த்தையை சொன்னார் என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.

2007 உலகக்கோப்பை தொடர்
2007 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தோனி தலைமையில் சென்றது. கோப்பை வெல்வது எல்லாம் அப்போது நோக்கமும் அல்ல, எதிர்பார்ப்பும் அல்ல. ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை இழந்த வடு மறையாத நேரம் அது. எனினும், இந்திய அணி எப்படியாவது அரை இறுதிக்கு சென்றால் போதும் என்றே ரசிகர்கள் எண்ணினார்கள்.

இக்கட்டான நிலையில் இந்தியா
லீக் சுற்றில் கடைசிப் போட்டியில் தொடரை நடத்திய இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை. அந்தப் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. டாப் ஆர்டர் சரிந்த பின், யுவராஜ் சிங், தோனி ஆடி வந்தனர்.

ஆண்ட்ரூ பிளின்டாப் ஓவர்
அப்போது 18வது ஓவரை இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ பிளின்டாப் வீசினார். அவரின் இரண்டு சிறந்த பந்துகளில் இரண்டு பவுண்டரி அடித்தார் யுவராஜ் சிங். அதை பிளின்டாப் விரும்பவில்லை. அதன் பின்பு தான் இருவருக்கும் வாக்குவாதம் வெடித்தது.

வம்பிழுத்த பிளின்டாப்
அந்த ஓவரின் முடிவில் பிளின்டாப் யுவராஜ் அடித்த ஷாட், மோசமானது என கூறி அவரை வம்பிழுத்துள்ளார். அப்போது யுவராஜ் சிங் என்ன சொன்னாய்? என அவரை திருப்பி கோபமாக கேட்டுள்ளார். பிளின்டாப் விடாமல் மீண்டும் அவருடன் சண்டை இட்டார்.

பிளின்டாப் என்ன சொன்னார்?
அடுத்து, உன் தொண்டையை அறுத்து விடுவேன் என யுவராஜ் சிங்கை பார்த்து பிளின்டாப் கூறி உள்ளார். அதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங் இந்த பேட்டைப் பார். உன்னை இந்த பேட்டை வைத்து எங்கே அடிக்கிறேன் பார்? என கொந்தளித்துள்ளார் யுவராஜ் சிங்.

வெறியான யுவராஜ்
அதன் பின் அம்பயர் வந்து அந்த வாக்குவாதத்தை நிறுத்தி உள்ளார். ஆனாலும், யுவராஜ் சிங்கிற்கு கோபம் அடங்கவில்லை. இனி ஒவ்வொரு பந்தையும் மைதானத்தை விட்டு அடிக்க வேண்டும் என வெறி கொண்டு முடிவு எடுத்தார். கோபத்தில் எடுத்த முடிவு என்றாலும் அது தான் அந்த சாதனையை செய்ய காரணமாக இருந்தது.

ஆறு சிக்ஸ் வெளுத்த யுவராஜ்
19வது ஓவரை ஸ்டூவர்ட் பிராடு வீசினார். அவர் வீசிய அந்த ஓவரின் ஆறு பந்துகளையும் ஆறு திசைகளில் சிக்ஸராக அடித்தார். சர்வதேச டி20 வரலாற்றில் முதன் முறையாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தார் யுவராஜ் சிங்.

வாங்கிக் கட்டிக் கொண்ட பிராடு
இதில் இன்று வரை மறக்க முடியாத வேடிக்கையான விஷயம் என்னவென்றால், பிளின்டாப் செய்த வேலைக்கு, ஸ்டூவர்ட் பிராடு வாங்கி கட்டிக் கொண்டது தான். ஸ்டூவர்ட் பிராடு இன்று வரை அந்த மோசமான ஓவரை மறக்கவில்லை. அவ்வப்போது சமூக வலைதளங்களில் அந்த ஓவரை நினைவுகூறுவார்.

வேகமான அரைசதம்
ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது ஒரு சாதனை என்றால், யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் கடந்து யாராலும் இன்று வரை முறியடிக்க முடியாத டி20 சாதனையை செய்தார். அந்தப் போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. யுவராஜ் சிங்கின் அந்த ஆறு சிக்ஸர்கள் இல்லாமல் இந்தியா வெற்றி பெற்று இருக்க வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications











