கோஹ்லி சங்கத்தில் இருந்து டோணி, அஸ்வின், பஜ்ஜி சங்கத்திற்கு தாவும் யுவராஜ்
டெல்லி: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடிகையும், மாடலுமான ஹேஸல் கீச்சை வரும் 30ம் தேதி திருமணம் செய்து கொள்கிறார்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது காதலியான இங்கிலாந்தை சேர்ந்த நடிகையும், மாடலுமான ஹேஸல் கீச்சை வரும் 30ம் தேதி திருமணம் செய்து கொள்கிறார்.

அவர்களின் திருமணம் பஞ்சாப் மாநிலம் பத்தேஹ்கார் சாஹிப் நகரில் உள்ள சீக்கிய கோவில் ஒன்றில் சீக்கிய முறைப்படி நடக்கிறது. யுவராஜின் திருமணத்தை குரு பாபா ராம் சிங் நடத்தி வைக்கிறார்.
இந்த திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர் கோஹ்லி தனது காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவுடன் திருமணத்தில் கலந்து கொள்கிறார்.
யுவராஜும், அவரது தாய் சப்னம் சிங்கும் நேரில் சென்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் யுவராஜ் ஹேஸலுடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications