Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"யுவராஜ், சேவாக் தோளை உதறினாலே 6 கோடி கொட்டும்.. நான் ஏழைங்க".. கைஃப் பேச்சுக்கு யுவி தந்த பதில்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்களான வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் மற்றும் முகமது கைஃப் ஆகியோர் களத்தில் மட்டுமல்ல, களத்திற்கு வெளியேயும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பது ஊருக்கே தெரியும். சமீபத்தில் இவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகும் 'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அங்கு முகமது கைஃப், யுவராஜ் மற்றும் சேவாக்கின் சொத்து மதிப்பை ஒப்பிட்டுப் பேசிய காமெடி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேசும் முகமது கைஃப், தனது நண்பர்களின் பணபலம் குறித்து ஜாலியாகக் கலாய்த்தார்.

Yuvraj Singh Virender Sehwag and Mohammad Kaif Reunite for a Hilarious Episode of The Great Indian Kapil Show on Netflix
Photo Credit: Netflix

"யுவராஜ் சிங் மற்றும் வீரேந்திர சேவாக் இருவருமே என்னை விடப் பல மடங்கு பணக்காரர்கள். அவர்களுக்குப் பணக்கஷ்டமே வராது. அவர்கள் சும்மா தங்கள் தோளை உதறினாலே, பாக்கெட்டிலிருந்து சர்வசாதாரணமாக 5லிருந்து 6 கோடி ரூபாய் வரை கீழே கொட்டும். அந்த அளவுக்கு வசதியானவர்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது நான் மிகவும் ஏழை" என்று கைஃப் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினார்.

கைஃப் இப்படிச் சொன்னதும், யுவராஜ் சிங் சும்மா இருப்பாரா? உடனடியாக ஒரு கேள்வியைக் கேட்டார். "அதெல்லாம் இருக்கட்டும்.. இப்போ நீங்க கால்ல என்ன பிராண்ட் ஷூ போட்டிருக்கீங்க?" என்று கேட்டார். அதற்கு கைஃப் சற்றும் யோசிக்காமல், "குஸ்ஸி" (மிகவும் விலையுயர்ந்த பிராண்ட்) என்று பதிலளித்தார். உடனே யுவராஜ் சிங், "பாத்தீங்களா.. குஸ்ஸி ஷூ போட்டிருக்காரு.. ஆனா இவரு ஏழையாம்!" என்று டைமிங்கில் கவுண்டர் கொடுக்க, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

மறக்க முடியாத ஆட்டம்:

2000-ம் ஆண்டுகளில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தூண்களாக இருந்தவர்கள் யுவராஜ் மற்றும் கைஃப். குறிப்பாக 2002-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நாட்வெஸ்ட் இறுதிப்போட்டியில், 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது, இவர்கள் இருவரும் அமைத்த 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் இந்தியாவிற்கு வரலாற்று வெற்றியைத் தேடித்தந்தது.

களத்தில் எவ்வளவு சீரியஸாக விளையாடினார்களோ, அதற்கு நேர்மாறாகக் களத்திற்கு வெளியே ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொண்டு ஜாலியாக வலம் வருகின்றனர். இந்த முழு எபிசோடும் நாளை (ஜனவரி 17) இரவு 8 மணிக்கு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. இதில் இன்னும் பல ரகசியங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, January 16, 2026, 20:25 [IST]
Other articles published on Jan 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+