For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாம் & ஜெர்ரியுடன் இளம் வீரரை வரவேற்ற யுவராஜ் சிங்

ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த நியூசிலாந்தின் இளம் வீரர் லியோ கார்ட்டருக்கு முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சக வீரர் ஆன்டன் தேவ்சிச்சின் பந்துவீச்சை எதிர்கொண்ட லியோ கார்ட்டர் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து அசத்தினார்.

இதையடுத்து அவருக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாம் அண்டு ஜெர்ரி புகைப்படத்தை பதிவிட்டு யுவராஜ்சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஒரு ஓவரில் 6 சிக்ஸ் அடித்த இளம்வீரர்

ஒரு ஓவரில் 6 சிக்ஸ் அடித்த இளம்வீரர்

நியூசிலாந்தின் சூப்பர் ஸ்மாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கேன்டர்பரி கிங்ஸ் மற்றும் நார்தர்ன் நைட்ஸ் இடையில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து வீரர் லியோ கார்டர் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

பாராட்டுகளை பெற்ற லியோ கார்ட்டர்

பாராட்டுகளை பெற்ற லியோ கார்ட்டர்

பந்து வீச்சாளர் ஆன்டன் தேவ்சிச் ஓவரை எதிர்கொண்ட கார்ட்டர், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் தன்னுடைய பேட்டை சுழற்றி சுழற்றி 6 பந்துகளில் 6 சிக்ஸ்களை விளாசினார்.

6 சிக்ஸ் கிளப்பிற்கு வரவேற்பு

6 சிக்ஸ் கிளப்பிற்கு வரவேற்பு

இந்நிலையில் லியோ கார்ட்டருக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின்மூலம் பாராட்டு தெரிவித்துள்ள இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் 6 சிக்சர் கிளப்பிற்கு அவரை வரவேற்றுள்ளார்.

தேவ்சிச்சிற்கு ஜெர்சியை வழங்க அறிவுரை

தேவ்சிச்சிற்கு ஜெர்சியை வழங்க அறிவுரை

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாம் அண்டு ஜெர்ரி புகைப்படத்தை பதிவிட்ட யுவராஜ்சிங், அவரின் இந்த சாதனையை நிகழ்த்த பந்துவீசிய தேவ்சிச்சிற்கு தன்னுடைய ஜெர்சியில் கையெழுத்திட்டு மரியாதை நிமித்தமாக பரிசளிக்குமாறு அறிவுறுத்தினார்.

டி20 உலக கோப்பையில் சாதனை

டி20 உலக கோப்பையில் சாதனை

கடந்த 2007ல் துவங்கப்பட்ட டி20 உலக கோப்பையில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸ்களை அடித்து சாதனை புரிந்தார். இங்கிலாந்து பௌலர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

சாதித்த மற்ற வீரர்கள்

சாதித்த மற்ற வீரர்கள்

லியோ கார்ட்டர், யுவராஜ்சிங் போன்றே 6 சிக்ஸர் கிளப்பில் வோர்செஸ்டர்ஷயரின் ரோஸ் வைட்லி, ஆப்கான் பிரீமியர் லீக் மூலம் ஹஸ்ரத்துல்லா ஸசாய் போன்றவர்களும் ஏற்கனவே இணைந்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் சாதனை

ஒருநாள் போட்டிகளில் சாதனை

இதேபோல ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஹெர்ஷல் கிப்சும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சர் கேரி சோபர்ஸ் மற்றும் ரவி சாஸ்திரியும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Story first published: Thursday, January 9, 2020, 12:56 [IST]
Other articles published on Jan 9, 2020
English summary
Yuvraj Singh Welcomes Leo Carter to '6 Sixes' Club with Tom & Jerry picture
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+