அந்த வலி எனக்கு தெரியும்... சீக்கிரமே மீண்டு வர்ற தைரியம் உங்க கிட்ட இருக்கு.. யுவராஜ்
மும்பை : உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
அவர் விரைவில் குணமடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக ஏற்படும் வலி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அதிலிருந்து மீண்டு வரும் வலிமை சஞ்சய் தத்திற்கு உண்டு என்றும் யுவராஜ் கூறியுள்ளார்.

இதயத்தில் ஏற்பட்ட வலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். சில மருத்துவ சிகிச்சைகளுக்காக வேலைகளிலிருந்து ஓய்வு எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் பூரண குணமடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ல் தனக்கு ஏற்பட்ட கேன்சர் நோயிலிருந்து குணமடைந்த யுவராஜ் சிங், நோயின் பாதிப்பு காரணமாக ஏற்படும் வலி தனக்கு தெரியும் என்றும் ஆனால், அதிலிருந்து மீண்டுவரும் வலிமை சஞ்சய் தத்திற்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பூரண குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications