யுவராஜ்சிங்கிற்கு என்னவாயிற்று? தவறான ஜெர்சியை அணிந்து களமிறங்கியதால் குழப்பம்
போர்ட்ஆப்ஸ்பெயின்: நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணிய வேண்டிய ஆடையை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து ஆடி அதிர்ச்சியளித்துள்ளார் யுவராஜ்சிங்.
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு இந்திய அணியின் ஜெர்சி வேறு. ஆனால் முந்தைய சாம்பியன்ஸ் டிராபிக்கு அணிந்த சீருடையை அணிந்து யுவராஜ்சிங் நேற்றைய 2வது ஒன்டேயில் களமிறங்கியுள்ளார்.
இப்போட்டியில், 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த யுவராஜ், ஹோல்டர் பந்தில் சாய்ஹோப்பிடம் பிடிபட்டு அவுட்டானார். யுவராஜ்சிங்கிற்கு மறதி அதிகமாகிவிட்டதா, அல்லது சாம்பியன்ஸ் டிராபியில் ஆடியதை போல ஃபார்முக்கு வர வேண்டும் என்ற சென்டிமென்ட் காரணமோ தெரியாது?
சலவைக்கு கொடுத்த இடத்தில் சீருடை டெலிவரி செய்ய தாமதம் ஆகிவிட்டது போலும் என நெட்டிசன்கள் இதை கேலி செய்கிறார்கள்.
Story first published: Monday, June 26, 2017, 14:12 [IST]
Other articles published on Jun 26, 2017


Click it and Unblock the Notifications