Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் ஒரு மாசம் அம்மா வீட்டுக்கு போறேன்.. மனைவிக்காக ஆட்டம் போட்ட சாஹல்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சாஹலுக்கும், அவரது மனைவிக்கும் விவகாரத்து ஆக உள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாஹல், புதிய வாழ்க்கை தொடங்க உள்ளது என்று போட்டோ பதிவிட, தனஸ்ரீயும் தனது பெயரிலிருந்து சாஹலின் பெயரை நீக்கியதே இந்த சிக்கலுக்கு காரணமானது.

சாஹல், வேறு ஒரு கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் காட்டுவது தமக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கும் சாஹல், விவகாரத்து பெற இருந்ததாகவும் தகவல் வெளியானது.

இதனையடுத்து, தாமும் தனது மனைவியும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சாஹல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். சாஹலின் மனைவியும் இது ஆதாரமற்ற செய்தி, இது வெறுப்பின் உச்சம் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

Yuzi Chahal and Dhanashree Insta reel video made fans happy

இந்த நிலையில் சாஹ்ல், தனஸ்ரீ ஜோடி மீண்டும் இன்ஸ்டாகிராமில் இணைந்து ஆட்டம் போட்டுள்ளனர். அதில் சாஹல், தாம் தனது அம்மா வீட்டுக்கு ஒரு மாதம் செல்ல உள்ளேன் என்று கூறிய உடன், டிவி ரிமோட்டை தூக்கி எறிந்து சாஹல் அடுவது போன்று வீடியோவை இந்த ஜோடி பதிவிட்டுள்ளது.

இதை பார்த்ததும், நிம்மதி பெரு மூச்சு அடைந்த ரசிகர்கள், இப்படியே மகிழ்ச்சியாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளனர். சினிமா நடிகர்கள் போல் அல்லாமல், கிரிக்கெட் வீரர்களிடையே விவகாரத்து பெறுவது என்பது மிகவும் குறைவு. இதனால் தான் சாஹல் விசயத்தில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Story first published: Tuesday, August 23, 2022, 21:01 [IST]
Other articles published on Aug 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+