Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னையா அணியிலிருந்து தூக்குனீங்க.. இங்கிலாந்தில் அறிமுக போட்டியிலேயே துவம்சம் செய்த சாஹல்

Yuzi Chahal : இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் ஒருவரான சாகல் அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றார். 34 வயதான சாஹல் கடைசியாக t20 உலக கோப்பையில் இடம் பிடித்திருந்தார்.

ஆனால் அவருக்கு அணியில் ஒரு போட்டியில் விளையாட கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடைசியாக இந்திய அணிக்கு அவர் விளையாடி ஒரு வருடம் ஆகிறது. வெஸ்ட் இண்டீஸ் எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி சாகல் இந்திய அணிக்காக விளையாடினார்.

cricket Duleep Trophy yuzi chahal

திறமை வாய்ந்த பவுலராக இருந்தாலும் அவர் அணியில் சேர்க்கப்படாதது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சாகல் நார்த்தாம்ப்டன் அணிக்காக அறிமுகமானார். சாகல் இங்கிலாந்துக்கு சென்றிருந்த நிலையில் இந்த போட்டியில் விளையாட நார்த்தாம்ப்டன் அணி நிர்வாகம் அழைத்தது.

இதனை அடுத்து இங்கிலாந்து கவுண்டி ஒருநாள் தொடரில் அறிமுகமான சாகல் அபாரமாக பந்து வீசி கெண்ட் அணியை சுக்குநூறாக உடைத்தார். 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த சாஹல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் கெண்ட் அணி 35.1 ஓவரில் 82 ரன்களுக்கு சுருண்டது.

இதனை அடுத்து நார்த்தாம்ப்டன் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்கள் எடுத்தது. சாகல் ஏற்கனவே கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் கெண்ட் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் இங்கிலாந்து கவுண்டியில் இடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

கெண்ட் அணி தங்களுடைய கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இலக்கை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி கட்டத்தில் தப்பியது. அந்த அணி இதற்கு முன்பு 60 ரன்களில் சுருண்டதே அதன் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். சாகலின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.

இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் எடுப்பதெல்லாம் சாதாரண காரியம் கிடையாது. ஆனால் சாகல் இவ்வளவு சிறப்பாக செயல்பட்டும், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.

Story first published: Thursday, August 15, 2024, 7:54 [IST]
Other articles published on Aug 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+