மும்பை: தனது மனைவி ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் சாகல் தெரிவித்து இருக்கின்றார். இந்திய கிரிக்கெட்டின் பிரபல லெக் ஸ்பின்னராக விளங்கிய சாகல் பல்வேறு போட்டிகளில் இந்திய அணி வெற்றிக்காக முக்கிய பங்காற்று இருக்கின்றார்.
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையும் சாகலுக்கு உள்ளது. இந்த நிலையில் சாகல், தனஸ்ரீ வர்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதால் சாகல் கடந்த மார்ச் மாதம் விவாகரத்து செய்து இருக்கின்றார்.

தன்னுடைய திருமண அனுபவம் குறித்து சாகல் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கின்றார். அதில்," என் வாழ்க்கையை நினைத்து எனக்கு மிகவும் சோர்வாக மாறிவிட்டது. நான் பலமுறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன். தினமும் இரண்டு மணி நேரம் நான் அழுவேன்."
"ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் என்னால் தூங்க முடியும். இதே போல் ஒரு 40- 45 நாள் எனக்கு இருந்தது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் தொடர்ந்து கிரிக்கெட்டில் விளையாடி வந்தேன். ஆனால் என்னால் பழையபடி கவனம் செலுத்த முடியவில்லை.ஏனென்றால் வெறும் இரண்டு மணி நேரம் தான் நான் தூங்குவேன்."
"என் நண்பர்களுடன் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கூறுவேன். அவர்கள் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். நான் வாழ்க்கையை நினைத்து மிகவும் பயந்தேன். என் மனைவியை நான் விவாகரத்து செய்த போது மக்கள் பலர் நான் அவரை ஏமாற்றியதாக கூறினார்கள்."
"நான் யாரையும் இதுவரை ஏமாற்றியது கிடையாது. நான் அப்படிப்பட்ட மனிதனும் இல்லை. என்னைவிட ஒரு விசுவாசம் உள்ள நபரை பார்க்க முடியாது. என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் நான் இதயத்திலிருந்து அன்பை செலுத்துவேன். நான் எதையும் எதிர்பார்க்க மாட்டேன். பலருக்கு நான் தான் வழங்குவேன். என்னைப் பற்றி தெரியாதவர்கள் தான் இந்த விவகாரத்தில் என் மீது பழியை போட்டார்கள்."
"எனக்கு இரண்டு தங்கைகள் இருக்கின்றார்கள். அவர்களோடு தான் நான் சிறுவயதிலிருந்து வளர்ந்தேன். பெண்களை எப்படி மதிப்பது என்று எனக்கு நன்றாக தெரியும். அப்படித்தான் என்னுடைய பெற்றோர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள். என்னுடைய பெயர் பல விஷயங்களில் தொடர்பு படுத்தி பேசப்படுகிறது. என்னை பற்றி எழுதினால் நிறைய பார்வையாளர்கள் படிப்பார்கள் என்பதால் சிலர் அவ்வாறு செய்கிறார்கள்" என்று சாகல் கூறியுள்ளார்.