Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட ஸ்டார்! இங்கிலாந்து மண்ணில் 5 விக்கெட் எடுத்து அபாரம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற் பந்து வீச்சாளராக விளங்கிய சாஹல் தற்போது அணியில் சேர்க்கப்படுவதே கிடையாது. 34 வயதான சாகல் இந்திய அணிக்காக 72 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் விளையாடி 121 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இதேபோன்று 80 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள சாகல் 96 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இது மட்டும் அல்லாமல் ஐபிஎல் தொடரில் 160 போட்டியில் விளையாடி 205 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த லேக் ஸ்ப்பினரான சாகல் விளங்கி வருகிறார்.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

ஆனால் சாகல் இதுவரை ஒரு முறை கூட சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது. சாகல் 37 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சாகல் கடைசியாக இந்திய அணிக்கு 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெற்ற டி20 போட்டியில் தான் விளையாடினார். அதன் பிறகு ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால் சாகலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் டெஸ்ட் போட்டியான துலீப் கோப்பை தொடரில் கூட நான்கு அணிகளில் ஒரு அணியில் கூட சாகலின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனால் கடுப்பான சாகல் தற்போது இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். சாஹல் தற்போது நார்தாம்ப்டன் அணிக்காக டெர்பிசியர் எதிரான போட்டியில் விளையாடினார்.

அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெர்பிசியர் அணி 150 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற ஸ்கோரில் விளையாடி வந்தது. ஆனால் சாகல் கையில் பந்து சென்றவுடன் மிகப்பெரிய மேஜிக் நடந்தது. அந்த அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 165 ரன்களில் டெர்பிசியர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாகல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும். சாகலை போல பிரித்வி ஷாவும் நார்தாம்ப்டன்சையர் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் பிரித்விஷா நான்கு மற்றும் இரண்டு ரன்கள் தான் இரண்டு இன்னிங்ஸிலுமே சேர்த்து சொதப்பினார். சாகல் ஒருமுறையாவது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடு வேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார்.

பலமுறை இந்தியா ஏ தொடரில் சா இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு டெஸ்ட் அறிமுகம் மட்டும் கிடைக்கவே இல்லை.சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர், ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பல பெருமைகளை சாகல் பெற்று இருந்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனின் வாய்ப்பு கிடைக்கவில்லை. அண்மையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் கூட சாகல் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

ஆனால் களத்தில் இறங்கி விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின், ஜடேஜா, குல்திப் யாதவ், அக்ச்சர் பட்டேல் போன்ற வீரர்கள் வரிசை கட்டி நிற்பதால் சாகலுக்கு கொஞ்சம் கூட இடம் கிடைப்பதில்லை. ஒருவேளை அஸ்வின் ஓய்வு பெற்ற பின் சாகல், லேக் ஸ்பின்னர் என்ற முறையில் ஏதேனும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம்.

சாகலும் ரோகித் சர்மாவும் உற்ற நண்பர்களாக இருக்கிறார்.இதனால் ரோகித் சர்மா தயவு வைத்தால் சாகலால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவுக்காக அறிமுகமாக முடியும். தம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளையாட முடியும் என்பதை சாகல் அடிக்கடி நிரூபித்து வருகிறார். இதனால் தேர்வு குழு தான் சாகலின் பெயரை சேர்க்க வேண்டும்.

Story first published: Wednesday, September 11, 2024, 17:41 [IST]
Other articles published on Sep 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+