For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"பட்டாஸா வெடிப்பேன்".. இலங்கை அணிக்கு.. "சொடக்கு" போட்டு சவால் விடுக்கும் இந்திய வீரர்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், உச்சக்கட்ட தன்னம்பிக்கையுடன் அந்த இந்திய வீரர் தனது ஃபார்ம் குறித்து பேசியிருக்கிறார்.

Recommended Video

Ind Vs SL நான் வெறும் paperகு தான் Vice captain - Bhuvaneshwar kumar | OneIndia Tamil

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

விராட் கோலி தலைமையிலான மெயின் அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், இந்திய 20 வீரர்கள் கொண்ட 'ஏ' அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ.

 3 ஒருநாள், 3 டி20

3 ஒருநாள், 3 டி20

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 பயிற்சியாளர் டிராவிட்

பயிற்சியாளர் டிராவிட்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 எங்களுக்கு அவமானம்

எங்களுக்கு அவமானம்

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் கேப்டனும், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தவருமான அர்ஜுனா ரணதுங்கா கூறுகையில், ""இரண்டாம் தர இந்திய அணி, இங்கு வருவது எங்கள் கிரிக்கெட்டை அவமதிப்பதாகும். வருமான தேவைகள் காரணமாக இந்திய பி அணியுடன் விளையாட ஒப்புக்கொண்டதற்கு தற்போதைய இலங்கை நிர்வாகத்தை நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியா தங்கள் சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பி பலவீனமான அணியை இங்கு விளையாட அனுப்பியது. இதற்கு எங்கள் வாரியத்தை தான் குறை கூற முடியும்" என்று சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

 யுவேந்திர சாஹல்

யுவேந்திர சாஹல்

இதற்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் வாரியம், வலிமையான இந்திய அணி தான் இலங்கைக்கு வந்திருக்கிறது. அந்த அணியின் பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் தான் என்று தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து பல வெளிநாட்டு வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் யுவேந்திர சாஹல் அளித்துள்ள பேட்டியில், "நான் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருநாள் தொடரில் விளையாடுகிறேன், ஆனால் இத்தொடருக்கு முன்பாக நாங்கள் ஏற்கனவே இரு பயிற்சி போட்டிகளில் விளையாடியுள்ளோம்.

 வேற சாஹலை பார்ப்பீங்க

வேற சாஹலை பார்ப்பீங்க

தினம் காலை நேரத்தில் கடும் பயிற்சி மேற்கொள்கிறோம். இதனால், இங்குள்ள வெயிலுக்கு ஏற்ப எங்களை தயார் செய்துகொண்டுவிட்டோம். எனக்கென்று இரண்டு பவுலிங் பாணி உள்ளது. இந்த தொடரில் நீங்கள் அதிக நம்பிக்கையுள்ள வேற விதமான சாஹலை பார்க்கப் போகிறீர்கள். நான் எனது பந்துவீச்சு ஆங்கிளில் கவனம் செலுத்தி வருகிறேன். அந்த இரண்டு ட்ரிக் பந்துவீச்சில் எந்த பந்தை அதிகம் வீச வேண்டும் என்பதை ஆராய்ந்து வருகிறேன்" என்று இலங்கை வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Story first published: Thursday, July 8, 2021, 20:36 [IST]
Other articles published on Jul 8, 2021
English summary
Yuzvendra Chahal about his form of Sri Lanka series - சாஹல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+