For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இனி நீங்க கணவன் - மனைவி இல்லை" சாஹல் - தனஸ்ரீ வர்மா விவாகரத்தில் இறுதி முடிவு.. என்ன நடந்தது?

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மாவுக்கு விவாகரத்து வழங்கி பாந்திரா குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி விவாகரத்துக்கு இருவரும் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் இருவருக்கும் விரைவாக நீதிமன்றம் விவாகரத்து வழங்கி இருக்கிறது.

அவர்கள் ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அவர்களுக்கு காத்திருப்பு காலம் ஏதும் இன்றி விவாகரத்து வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் மனமுவந்து ஒப்புக்கொண்டதால் அவர்கள் விவாகரத்து பெற்றதாகவும், அவர்கள் இனி கணவன் மனைவி அல்ல என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Yuzvendra Chahal and Dhanashree Verma Granted Divorce by Mumbai Court

யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவுக்கு ஜீவனாம்சமாக 4.75 கோடி ரூபாயை அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலை, தனஸ்ரீ வர்மா கடந்த 2020டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். தனஸ்ரீ வர்மா நடனக் கலைஞராக, சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருந்தார்.

அவர்கள் இருவரும் 2022 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதை அடுத்து பிப்ரவரி 5 அன்று விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். பொதுவாக விவாகரத்து பெற விண்ணப்பித்தால் ஆறு மாத காலம் அவர்கள் இருவரையும் பிரிந்து வாழுமாறு நீதிமன்றம் அறிவுரை வழங்கும். அதன் பின்னரே விவாகரத்து குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால், இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதை சுட்டிக் காட்டி விரைவாக விவாகரத்து வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது யுஸ்வேந்திர சாஹல் 2025 ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். இந்த முறை அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். அவரை அந்த அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது.

செய்தி சுருக்கம்:

  • கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
  • இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
  • பரஸ்பர ஒப்புதலின் பேரில் விவாகரத்து வழங்கப்பட்டது.
  • யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவுக்கு ஜீவனாம்சமாக ரூ. 4.75 கோடி வழங்கியுள்ளார்.
  • யுஸ்வேந்திர சாஹல் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2025 தொடரில் விளையாட உள்ளார்.
Story first published: Thursday, March 20, 2025, 17:05 [IST]
Other articles published on Mar 20, 2025
English summary
Yuzvendra Chahal and Dhanashree Verma Granted Divorce by Mumbai Court
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+