Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வீரர்களின் ருத்ர தாண்டவம்.. தென்னாப்பிரிக்காவை புரட்டி எடுத்த இந்திய அணி.. 3வது டி20ல் அபார வெற்றி

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கிய ருதுராஜ் கெயிக்வாட் - இஷான் கிஷான் ஆகியோர் தென்னாப்பிரிக்காவை பந்தாடினர். ருதுராஜ் (35 பந்துகளில் 57 ) சர்வதேச டி20ல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுணையில் இஷான் கிஷான் 35 பந்துகளில் 54 ரன்களை விளாசினார்.

திடீரென பின்னடைவு

திடீரென பின்னடைவு

13 ஓவர்களில் 128 ரன்களை குவித்திருந்த இந்திய அணிக்கு அதன்பிறகு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் (14 ), கேப்டன் ரிஷப் பண்ட் (6), தினேஷ் கார்த்திக் (6) என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் 21 பந்துகளில் அதிரடியாக 31 ரன்களை சேர்த்தார். இதனால் 20 ஓவர்களில் இந்தியாவால் 179 ரன்களை சேர்க்க முடிந்தது.

தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ்

சாதாரண இலக்கு தான் என நினைத்து வந்த தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி தான். கேப்டன் தெம்பா பவுமா (8), ரீசா ஹெண்ட்ரிக்ஸ் (23), டுவைன் பிரிட்டோயஸ் (20) என டாப் ஆர்டர் முழுவதுமாக சரிந்தது. கடந்த 2 போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் விமர்சத்திற்கு ஆளான யுவேந்திர சாஹல் 3 விக்கெட்களும், ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்களும் எடுத்து கம்பேக் கொடுத்தனர்.

சொதப்பிய நம்பிக்கை வீரர்கள்

சொதப்பிய நம்பிக்கை வீரர்கள்

தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான வாண்டர் டுசைன் (1), டேவிட் மில்லர் (3) என மோசமாக சொதப்பினர். இதன் பின் வந்த வீரர்களும் நிலைக்க முடியாமல் போனதால் தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 2 - 1 என்ற நிலைக்கு வந்துள்ளது.

Story first published: Tuesday, June 14, 2022, 22:48 [IST]
Other articles published on Jun 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+