Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுஸ்வேந்திர சாஹல் ஓய்வு அறிவிப்பு.. ஆனால் கிரிக்கெட் இன்னும் முடியவில்லை என உருக்கமான பதிவு

மும்பை: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், முதல் தர கிரிக்கெட்டிலிருந்து (சர்வதேச மற்றும் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட்) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்திய வெள்ளைப்பந்து அணிகளான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மீண்டும் ஆட வேண்டும் என்ற தனது வேட்கை இன்னும் ஓயவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

36 வயதான யுஸ்வேந்திர சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது - "எனது 10வது வயதியில் நான் முதன்முதலில் கையில் பிடித்தது ஒரு சிவப்பு பந்துதான். அப்போது இந்த விளையாட்டின் மீது எனக்கு இவ்வளவு காதல் வரும் என்று எனக்குத் தெரியாது. சிவப்பு பந்து கிரிக்கெட் (டெஸ்ட் கிரிக்கெட்) எனக்கு பொறுமை, மன உறுதி மற்றும் ஒவ்வொரு ரன்னுக்காகவும் விக்கெட்டுக்காகவும் பல மணிநேரம் போராடும் மகிழ்ச்சியைக் கற்றுக்கொடுத்தது.

Yuzvendra Chahal Announces Retirement from First-Class Cricket Vows to Fight for White-Ball Return

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எனது கடைசி முதல் தர போட்டியை ஆடி முடித்துள்ளேன். இந்திய அணிக்காக வெள்ளை உடையில் டெஸ்ட் தொப்பியை தலையில் அணிய வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. அது நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால் இந்த வடிவத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் மிகுந்த மனநிறைவோடும் நன்றியோடும் இருக்கிறேன்."

"என் ஆட்டம் இன்னும் முடியவில்லை!" சிவப்பு பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், இந்திய அணிக்காக மீண்டும் ஆடும் ஆசை இன்னும் குறையவில்லை.

"சிவப்பு பந்து கிரிக்கெட் எனக்கு வாழ்நாளின் மிக அழகான நினைவுகளை தந்துள்ளது. ஆனால் எனது கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடிந்துவிடவில்லை. எனது நாட்டிற்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற பசி என் மனதில் இன்னும் கொழுந்துவிட்டு எரிகிறது. என்னிடம் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது. ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க எனது முழு பலத்தையும் கொடுத்து போராடுவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

யுஸ்வேந்திர சாஹல் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் 49 போட்டிகளில் விளையாடி 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 25 ரன்களுக்கு 6 விக்கெட் ஆகும். சமீபத்தில் இங்கிலாந்தின் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய அவர், 5 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை சாய்த்தார். டர்ஹாம் அணிக்கு எதிராக ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் ஆடியதே அவரது கடைசி முதல் தர போட்டியாக அமைந்தது.

"98-தான்.. சச்சினின் 100 சதங்களை விராட் கோலி தொட முடியாது".. ஆகாஷ் சோப்ரா அதிரடி கணிப்பு

சாஹலின் சர்வதேச சாதனை

இந்திய அணிக்காக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகாத சாஹல், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனைகளை படைத்துள்ளார். இந்தியாவுக்காக 72 ஒருநாள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 217 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் சாஹல், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கலக்கி வருகிறார். தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே முழு கவனம் செலுத்தி மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Story first published: Friday, October 2, 2026, 15:48 [IST]
Other articles published on Oct 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+