For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

39 ஆண்டு கால சாதனை தகர்ப்பு... 2வது ODI-ல் யுவேந்திர சாஹல் படைத்த சரித்திரம்.. ரசிகர்கள் வியப்பு!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் யுவேந்திர சாஹல் பெரும் சாதனையை படைத்துள்ளார்.

Recommended Video

IND vs ENG 2nd ODI England அணி அபார வெற்றி *Cricket

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49வது ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சாஹல் பவுலிங்

சாஹல் பவுலிங்

இங்கிலாந்து அணியின் இந்த குறைவான ஸ்கோருக்கு இந்திய அணியின் யுவேந்திர சாஹல் தான் காரணம் ஆகும். ஓப்பனிங் வீரர் ஜேசன் ராய்-ஐ 23 ரன்களுக்கு ஹர்திக் பாண்ட்யா அவுட்டாக்கினார். இதன்பின்னர் யுவேந்திர சாஹல் எடுத்த 4 முக்கியமான விக்கெட்கள், ஆட்டத்தின் ஸ்கோரையே மாற்றியது.

முக்கிய விக்கெட்கள்

முக்கிய விக்கெட்கள்

அவர் வீசிய ஓவர்களில் ஓப்பனிங் வீரர் ஜானி பேர்ஸ்டோ 38 (38), ஜோ ரூட் 11 (21), பென் ஸ்டோக்ஸ் 21 (23), மொயீன் அலி 47 (64) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்தனர். மொத்தமாக 10 ஓவர்களை வீசிய சாஹல் 47 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இந்த 4 விக்கெட்களும் சீரான வேகத்தில் ரன் குவித்து வந்தவர்கள் ஆகும்.

புது சாதனை

புது சாதனை

இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் 39 வருட சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டின் பிறப்பிடம் எனக்கருதப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்களில் 4 விக்கெட்களை எடுத்த ஒரே இந்திய பவுலர் என்ற பெருமையை சாஹல் பெற்றார்.

சாதனையாளர்கள்

சாதனையாளர்கள்

இதற்கு முன்பு கடந்த 1983ம் ஆண்டு மொஹிந்தர் அமர்நாத் அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றி 12 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதன் பின்னர் அஷிஷ் நெஹ்ரா 3/26, ஹர்பஜன் சிங் 3/28 என எடுத்திருந்தனர். ஆனால் இன்று அவர்கள் அனைவரையும் முந்தி யுவேந்திர சாஹல் புதிய சாதனையை படைத்துள்ளார்.

Story first published: Thursday, July 14, 2022, 23:37 [IST]
Other articles published on Jul 14, 2022
English summary
Yuzvendra Chahal Record ( இந்தியா vs இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி ) இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் யுவேந்திர சாஹல் பெரும் சாதனையை படைத்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+