Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஹலின் புதிய சாதனை என்ன தெரியுமா..... உங்களுக்கு வயிறு வலிச்சா நாங்க காரணமில்லை!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இரண்டாவது ஒருதினப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இருந்தாலும், தோனி இரண்டு சாதனைகளைப் படைத்தார். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் புதிய சாதனை படைத்து, வீரர்களுக்கு சிரிப்பை வரவழைத்தார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என இந்தியா வென்றது.

Yuzvendra chahal creates new record

அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டி நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வென்றது.

இந்த ஆட்டத்தின்போது, விக்கெட் கீப்பராக 300 கேட்ச்கள் பிடித்த சாதனையோடு, ஒருதினப் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் கடந்த 4வது வீரர் என்ற பெருமையை கேப்டன் கூல் தோனி பெற்றார்.

இந்திய அணியின் தோல்வி உறுதியான கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார் இளம் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல்.

48வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி வீசினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்தார் சாஹல். உடனே இந்திய டிரெஸ்ஸிங் ரூமை நோக்கி பேட்டை உயர்த்தி காட்டி வெற்றியைக் கொண்டாடினார்.

அப்படி என்ன சாதனையை சாஹல் புரிந்தார் என்றால், ஒருதினப் போட்டிகளில் தனது முதல் பவுண்டரியை அவர் அடித்துள்ளார். சாஹல் மற்றும் இந்திய வீரர்கள் விழுந்து விழுந்து சிரித்த இந்தக் காட்சி அடங்கிய வீடியோவைப் பாருங்கள்.

இதவரை 25 ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் 45 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆனால் 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 12.

Story first published: Sunday, July 15, 2018, 17:36 [IST]
Other articles published on Jul 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+