Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தனஸ்ரீ வர்மா இப்படி செய்ததால் தான்.. சாஹல் விலகினார்.. விளாசும் ரசிகர்கள்.. உண்மை என்ன?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் சுழற் பந்துவீச்சாளர் ஆக இடம்பெற்று வந்த யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இதை அடுத்து ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அவர் பல்வேறு ஆண்களுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதால் தான் சாஹல் அவரை விவாகரத்து செய்கிறார் எனவும் அவர்களாகவே ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி உள்ளனர்.

yuzvendra chahal dhanashree verma

சாஹல் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வந்த நேரத்தில் தனுஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது தனஸ்ரீ வர்மா நடன கலைஞராக இருந்தார். அவருக்கு சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களும் இருந்தனர். ஆனால், தனஸ்ரீ வர்மா திருமணத்துக்கு பின்னரும் தனது நடன வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அதற்காக அவர் பல்வேறு நபர்களுடன் இணைந்து நடனம் ஆடி வந்தார். அதுவரை எல்லாம் சரியாகவே இருந்தது. ஆனால், அவர் பல்வேறு ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்தது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. அதை சுட்டிக் காட்டி இருக்கும் ரசிகர்கள் திருமணத்துக்கு பின்னும் அவர் அதிகப்படியாக இது போல நடந்து கொண்டதால் தான் சாஹல் அவரை விட்டு விலகினார் என கூறி வருகின்றனர்.

பிரதிக் உத்தேகர் என்ற பாலிவுட் நடன இயக்குனரை தனஸ்ரீ வர்மா காதலித்தார் என ஒரு வதந்தியும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. சாஹலை திருமணம் செய்யும் முன் தனஸ்ரீ வர்மா ஓர் தொலைக்காட்சி நிகழச்சி ஒன்றில் பிரதிக் உத்தேகருடன் பங்கேற்றார்.

அப்போது இருவரும் நெருக்கமாக அணைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பிரதிக் தான் தற்போதைய விவாகரத்துக்கு காரணம் என சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.

இதனிடையே சாஹல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பின்றி தவித்து வருகிறார். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையிலும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. அவரது கிரிக்கெட் வாழ்வு ஊசலாடிக் கொண்டு இருக்கும் அதே சமயம், அவரது தனிப்பட்ட வாழ்வும் கசப்பாக மாறி உள்ளது.

Story first published: Monday, January 6, 2025, 11:04 [IST]
Other articles published on Jan 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+