Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருங்க அப்படி சொன்னது??.. யுவேந்திர சாஹல் - தனஸ்ரீ விவாகரத்தா??.. உண்மையை உடைத்த சாஹல்!

மும்பை: யுவேந்திர சாஹல் - தனஸ்ரீ வெர்மா பிரியவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கான காரணம் கசிந்துள்ளது.

Recommended Video

IND vs ZIM 1st ODI 10 விக்கெட் வித்தியாசத்தில் India அணி வெற்றி *Cricket

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக வளர்ந்து வருபவர் யுவேந்திர சாஹல்.

ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள சாஹல், அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சாஹல் பிரச்சினை

சாஹல் பிரச்சினை

இந்நிலையில் அவரின் திருமண வாழ்க்கை குறித்து இன்று அதிர்ச்சி செய்தி வெளியானது. அதாவது சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வெர்மா ஆகியோருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் விவாகரத்துக்கு முறையிடவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் இருந்தன.

சர்ச்சை பதிவுகள்

சர்ச்சை பதிவுகள்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனஸ்ரீ வெர்மா என்ற பெயரின் பின் இருந்த சாஹல் என்ற கணவனின் பெயரை நீக்கியுள்ளார். இதே போல சாஹலும் இன்ஸ்டாவில் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் "இனி புதிய வாழ்க்கை தொடங்கவுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர்கள் பிரியவிருப்பது கிட்டத்தட்ட உறுதியானது.

சர்ச்சை பதிவுகள்

சர்ச்சை பதிவுகள்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனஸ்ரீ வெர்மா என்ற பெயரின் பின் இருந்த சாஹல் என்ற கணவனின் பெயரை நீக்கியுள்ளார். இதே போல சாஹலும் இன்ஸ்டாவில் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் "இனி புதிய வாழ்க்கை தொடங்கவுள்ளது" எனக்குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர்கள் பிரியவிருப்பது கிட்டத்தட்ட உறுதியானது.

 சாஹலின் விளக்கம்

சாஹலின் விளக்கம்

இந்நிலையில் இந்த தகவலுக்கு யுவேந்திர சாஹலே விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டுள்ள அவர், நானும், தனஸ்ரீயும் பிரியவுள்ளதாக வெளியான தகவல் எதிலும் உண்மை தன்மை இல்லை. தயவு செய்து யாரும் அதனை நம்பி பெரிதாக்க வேண்டாம். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, அனைவரிடமும் அன்பு பெருக முயற்சி செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 நற்செய்தியா?

நற்செய்தியா?

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள இந்த ஜோடிக்கு குழந்தை எதுவும் கிடையாது. ஒருவேளை தனஸ்ரீ கர்ப்பமாக இருப்பதால் சாஹல் இப்படி ஒரு பதிவை போட்டிருக்கலாம் என்றும் அது தவறாக போய் முடிந்திருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, August 18, 2022, 20:59 [IST]
Other articles published on Aug 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+