
2வது டி20
இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களின் வானவேடிக்கை தவிர, மற்றும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின. ஆட்டத்தின் போது திடீரென பாம்பு ஒன்று களத்திற்கு புகுந்ததால் வீரர்கள் ஓரம் அழைத்து செல்லப்பட்டு போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மின் விளக்குகள் திடீரென அணைந்ததால் மீண்டும் போட்டிகள் நிறுத்தப்பட்டு வந்தன.

யுவேந்திர சாஹல் சேட்டை
இந்நிலையில் இந்த இடைவேளை நேரத்தில் சாஹல் செய்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாக உள்ளது. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு குளிர்பானங்களை கொடுப்பதற்காக சாம்ஷி வந்திருந்தார். அவர்களுடன் ரிஷப் பண்ட்-ம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த யுவேந்திர சாஹல் சாம்ஷியை பின்னாடி இருந்து ஓங்கி உதைத்தார்.

என்ன நடந்தது?
தென்னாப்பிரிக்க வீரரை சாஹல் என்ன திடீரென உதைக்கிறார் என ரசிகர்களும் பதறினர். ஆனால் சகஜமாக திரும்பிய சாம்ஷி சாஹலின் தோளில் கையை போட்டுக்கொண்டு ஜாலியாக பேசி வலம் வந்தார். சாஹல் சற்று குசும்பு பிடித்தவர் தானே, என ரசிகர்களும் அமைதியாகினர். பின்னர் இருவரும் ஒற்றுமையாக களத்தை விட்டு வெளியேறினர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Yuzi bhai 😂#INDvSA #CricketTwitter pic.twitter.com/CTkXqpw2A5
— ...... (Brahman_Kuldip) October 2, 2022
ஏன் உதைத்தார்?
யுவேந்திர சாஹல் மற்றும் தப்ரைஸ் சாம்ஷி இருவரும் ஐபிஎல்-ல் ஆர்சிபி அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள் ஆகும். கடந்த 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சாம்ஷி அந்த அணிக்காக விளையாடியுள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற முறையில் விளையாடிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











