Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"டிராவிட் அப்போதே கூறிவிட்டார்” கடைசி ஓவர்களில் ஸ்பின் பவுலிங் எதற்கு?.. சாஹல் சுவாரஸ்யம் தகவல்!!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதற்கு ராகுல் டிராவிட் தான் காரணம் என யுவேந்திர சாஹல் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை சேர்த்தது. இதன்பின் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 305 ரன்கள் மட்டுமே எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

 முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

இந்த போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான பும்ரா, ஜடேஜா, ஷமி உள்ளிட்டோர் இல்லாத போதும், பவுலிங்கில் முக்கிய திருப்புமுனை ஏற்படுத்திக்கொடுத்தவர் சீனியர் வீரர் யுவேந்திர சாஹல் தான். வெஸ்ட் இண்டீஸ் அணியில் 66 பந்துகளில் 55 ரன்கள் அடித்து அச்சுறுத்தல் கொடுத்து வந்த பிரண்டன் கிங்-ஐ வீழ்த்தி ட்விஸ்ட் கொடுத்தது சாஹல் தான். இதே போல அதிரடி வீரர் ரோவ்மென் போவெல்லையும் 6 ரன்னுக்கு வெளியேற்றிருந்தார்.

அட்டகாச பவுலிங்

அட்டகாச பவுலிங்

308 ரன்கள் இலக்கை கட்டுப்படுத்த களமிறங்கிய சாஹல் மொத்தமாக 10 ஓவர்கள் வீசி 58 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். அவரின் எகானமி வெறும் 5.80 மட்டுமே ஆகும். இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காமல் இருந்து வந்த சாஹல் தற்போது மீண்டும் தரமான கம்பேக் கொடுத்துள்ளார்.

 சாஹல் பேச்சு

சாஹல் பேச்சு

இந்நிலையில் இதற்கு டிராவிட் தான் காரணம் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டிராவிட் எப்போதுமே என்னிடம் யுவி உன் மீது நிறைய நம்பிக்கை உள்ளது. உனது முழு பலத்தை வெளிப்படுத்து, வெற்றி கிடைக்கும் எனக் கூறுவார். இப்படி ஒரு பயிற்சியாளர் எனக்கு தொடர்ந்து துணை நிற்கும் போது, எப்படிப்பட்ட ஆட்டத்தையும் மாற்றி அமைக்க முடியும்.

கடைசி 3 ஓவர் மாற்றம்

கடைசி 3 ஓவர் மாற்றம்

இந்த போட்டியில் பந்து பழையது ஆனால், நிச்சயமாக நன்கு டேர்னாகி திணறடிக்கும் என்பதை அறிவேன். அதற்கேற்றார் போல 40வது ஓவருக்கு பின் 3 ஓவர்கள் வீச வேண்டும் எனக் கூறினார்கள். எனவே அதற்கேற்றார் போல எனது பவுலிங் லைனை மாற்றினேன். குறிப்பாக லெக் சைடில் பவுண்டரி தூரம் என்பதால் வைட் லைனிலேயே பந்தை வீசினேன். இதுபோன்று ஏற்கனவே டிராவிட் பயிற்சி கொடுத்திருந்தார். அது தற்போது உதவியுள்ளது என சாஹல் கூறினார்.

Story first published: Saturday, July 23, 2022, 14:23 [IST]
Other articles published on Jul 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+