Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப நாளைக்கு அப்புறமா என்னோட கதவு தட்டப்பட்டுச்சு... அங்கயே என்னோட சுதந்திரம் போயிடுச்சு!

துபாய் : கடந்த 17ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி பௌலர் சஹலின் வருங்கால மனைவி தனஸ்ரீ வர்மா அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

கடந்த 11ம் தேதி யூஏஇக்கு சென்ற தனஸ்ரீ, தொடர்ந்து குவாரன்டைனில் இருந்துவிட்டு பின்பு சஹலுக்கு இந்த சர்ப்ரைசை கொடுத்துள்ளார்.

Yuzvendra Chahal Reaction after his Fiancees Surprise Before IPL Match

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த சஹல், திருமணத்திற்கு முன்பே தன்னுடைய சுதந்திரம் எவ்வாறு பறிபோயுள்ளது என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ஆர்சிபி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பௌலிங் போட்ட சஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். அந்த போட்டியில் ஆர்சிபியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார். அவரின் அதிரடிக்கு ஒரு காரணமும் உள்ளது. முன்னதாக யூஏஇக்கு கடந்த 11ம் தேதி வந்த அவரது வருங்கால மனைவி தனஸ்ரீ, அவருக்கு போட்டிக்கு முன்னதாக தன்னுடைய வருகை மூலம் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்ததே காரணம்.

Yuzvendra Chahal Reaction after his Fiancees Surprise Before IPL Match

இவர்களின் இந்த சந்திப்பை ஆர்சிபி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, சஹலின் சிரிப்பிற்கு காரணம் என்று கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளது. தன்னுடைய வருங்கால மனைவியின் திடீர் விசிட்டால் மகிழ்ச்சி அடைந்தாலும் திருமணத்திற்கு முன்னதாகவே தன்னுடைய சுதந்திரம் எவ்வாறு பறிபோனது என்று குறும்புடன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் சஹல்.

Story first published: Friday, October 23, 2020, 15:22 [IST]
Other articles published on Oct 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+