இன்னும் மாறவே இல்லையா நீங்க.. நெதர்லாந்து போட்டியில் யுவேந்திர சாஹல் செய்த குசும்பு.. சிரிப்பலை!
சிட்னி: நெதர்லாந்து அணியுடனான போட்டியில் யுவேந்திர சாஹல் செய்த விஷயம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 179/2 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 123/9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

நெதர்லாந்து போட்டி
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, நெதர்லாந்து கத்துக்குட்டி அணி என நினைக்காமல் அதே ப்ளேயிங் 11 உடன் களமிறங்கியது. அதுவும் சிட்னி மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாகும். இதில் யுவேந்திர சாஹல் போன்ற ஸ்பின்னர் விக்கெட்களை குவிப்பதற்கு அதிக வாய்ப்பிருந்தது.

மீண்டும் ஏமாற்றம்
பாகிஸ்தான் அணியில் 3 இடதுகை ஸ்பின்னர்கள் இருந்ததால் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் பேட்டிங் ஆளமாக வேண்டும் என்பதால் நெதர்லாந்து போட்டியிலும் அஸ்வின் சேர்க்கப்பட்டு, யுவேந்திர சாஹல் புறக்கணிக்கப்பட்டார். முன்னணி ஸ்பின்னர் எப்படி ஒதுக்கப்படுகிறார் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் இந்த போட்டியில் அதிருப்தியில் இருந்த யுவேந்திர சாஹல், மைதானத்தில் செய்த விஷயம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் சாஹல் புறகணிக்கப்பட்ட போது பவுண்டரி எல்லையில் படுத்துக்கொண்டு ஒரு போஸ் கொடுப்பார். இது மிகவும் பிரபலம். அதே போஸை இன்றைய போட்டியிலும் செய்தார்.

ட்ரெண்டிங் ஃபோட்டோ
பவுண்டரி எல்லையில் அவர் தனக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்பது போல் ஏக்கமாக படுத்திருந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. யுவேந்திர சாஹல் கடந்த சில போட்டிகளாக சரியான ஃபார்மில் இல்லை. அதிகளவில் ரன்களை வாரி வழங்கி வருகிறார். இதனால் தான் ரோகித் சர்மா ஒரே திட்டத்தில் பயணித்து வருகிறார் எனக்கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications