Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஹல் வீட்டில் நுழைந்த கொரோனா.. குடும்பத்தில் அடுத்தடுத்து பாதிப்பு.. தந்தை நிலை மட்டும்.. விவரம்!

ஹரியானா: கிரிக்கெட் வீரர் யுவேந்திர சஹாலின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு விஸ்வரூபம் அடைந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹலும் இணைந்துள்ளார். அவரின் தந்தை மற்றும் தாய்க்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இதுகுறித்த அறிவிப்பை சாஹலின் மனைவி தன ஸ்ரீ வர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி சாஹலின் தாயாருக்கு அறிகுறிகள் பெரியளவில் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது தந்தைக்கு அதிகப்படியான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவல நிலை

அவல நிலை

தன ஸ்ரீயின் மற்றொரு பதிவில், மாமனாருக்காக நானும் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன், அங்கு உள்ள அவல நிலையை கண்ணால் பார்த்தேன். நான் தேவையான முன்னெச்சரிக்கையுடன் தான் சென்றேன் இருப்பினும்..." எனக்கூறி பதற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அனைவரும் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துக்கொள்ளுங்கள் எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் 2 பேர்

மேலும் 2 பேர்

இதுமட்டுமல்லாமல் தன ஸ்ரீயின் தாயார் மற்றும் சகோதரருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அவரின் தகவலில், நான் ஐபிஎல் தொடரின் பபுளில் இருந்தபோது என் தாய் மற்றும் சகோதரருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் தற்போது குணமடைந்துவிட்டனர். எனினும் குடும்பத்தினர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் அவர்களை என்னால் கவனித்துக்கொள்ள முடியாமல் போனது பெரும் வேதனையாக இருந்தது எனத்தெரிவித்துள்ளார்.

சாஹலின் நிலை என்ன

சாஹலின் நிலை என்ன

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த யுவேந்திர சஹால் சமீபத்தில் தான் வீடு திரும்பினார். குடும்பத்தினருடன் எப்படியும் அவர் நெருங்கி பழகி இருப்பார் என்பதால் அவருக்கும் கொரோனா பரவி இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் அவரின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Story first published: Thursday, May 13, 2021, 16:53 [IST]
Other articles published on May 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+