தனஸ்ரீ வர்மா.. சாஹல் வெளியிட்ட பதிவு.. இரைச்சலுக்கு மத்தியில் அமைதியே சங்கீதம்.. என்ன நடந்தது?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அவர்கள் இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் இதுவரை சேர்ந்து இருப்பது போல பகிர்ந்த புகைப்படங்களை நீக்கி உள்ளனர்.
ஆனால், இதுவரை விவாகரத்து குறித்து யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. சாஹல் மட்டுமே இன்ஸ்டாகிராமில் தனது பெற்றோரை பற்றி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். ஆனால், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அதில் தெளிவாக புரியவில்லை. இதன் இடையே அவர் ஒரு பெண்ணுடன் ஹோட்டல் ஒன்றிலிருந்து வெளியே வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

சாஹல் அப்போது தனது முகத்தை மறைத்துக் கொண்டார். அந்தப் பெண் யார்? சாஹல் ஏன் ஊடகங்களை பார்த்தவுடன் மறைந்து ஓட வேண்டும்? என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் அவர் மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், "அமைதியே சிறந்த சங்கீதம், இங்கு இருக்கும் இரைச்சலை தாண்டி கேட்பவர்களுக்கு.." என சாக்ரட்டீஸ் சொன்ன ஒரு வாசகத்தை சுட்டிக்காட்டி இருக்கிறார். அவர் நேரடியாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. மீண்டும் மறைமுகமான ஒரு பதிவை மட்டுமே வெளியிட்டு இருக்கிறார்.
இதன் இடையே சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த காலங்களில் பல இந்திய வீரர்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்து இருக்கின்றனர். சிலர் மனைவியால் பெரிய அளவில் பாதிப்பையும் எதிர்கொண்டு உள்ளனர். தினேஷ் கார்த்திக், முகமது ஷமி, ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் வரிசையில் சாஹலும் விவாகரத்து கோர உள்ளதாக ரசிகர்கள் தங்கள் அனுதாபத்தை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications