For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக் பாண்டியாவின் நிச்சயதார்த்தம் - குல்தீப்பை வம்பிழுத்த யுஸ்வேந்திர சாஹல்

Recommended Video

Hardik Pandya engaged to Natasha Stankovic in speedboat

மும்பை: புத்தாண்டின் துவக்கத்தில் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்குடனான தன்னுடைய நிச்சயதார்த்த வீடியோவை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா வெளியிட்டார்.

ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல சக வீரர்கள் மற்றும் பாலிவுட், டிவி நட்சத்திரங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்து தெரிவித்த குல்தீப் யாதவை சக வீரர் யுஸ்வேந்திர சாஹல் வம்பிழுத்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா நிச்சயதார்த்தம்

ஹர்திக் பாண்டியா நிச்சயதார்த்தம்

தன்னுடைய புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடிய ஹர்திக் பாண்டியா, நடுக்கடலில் ஸ்பீட் போட்டில் தன்னுடைய காதலி நடாஷா ஸ்டான்கோவிக்குக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் பதிவு

நடுக்கடலில் தான் செய்து கொண்ட நிச்சயதார்த்தம் குறித்த வீடியோவையும் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், கேப்டன் விராட் கோலி உள்ளிட்டவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

"லட்ச லட்சமாய் வாழ்த்துக்கள்"

ஹர்திக் பாண்டியாவின் நிச்சயதார்த்தத்திற்கு சக வீரர் குல்தீப் யாதவும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் தனது கமெண்ட்டில் லட்சம் லட்சமாய் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

பதிலடி கொடுத்த குல்தீப்

பதிலடி கொடுத்த குல்தீப்

அவரின் இந்த கமெண்டிற்கு பதிலளித்த யுஸ்வேந்திர சாஹல், அடுத்தது நீங்க தாங்க என்று இந்தியில் தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர்களும் சிரிப்பு எமோஜிகளுடன் பதிலளித்தனர். இந்நிலையில் சாஹலின் கமெண்டிற்கு பதிலளித்த குல்தீப், முதல்ல நீங்கதான் என்று தெரிவித்தார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கம் களைகட்டியது.

Story first published: Friday, January 3, 2020, 18:51 [IST]
Other articles published on Jan 3, 2020
English summary
Yuzven Chahal teased Guldeep with Hardik Pandya's engagement post
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+