அம்பயருக்கு உயிர் பயம் காட்டிய சாஹல்.. குசும்புக்கு ஒரு எல்லையே இல்லையா.. மைதானத்தில் சிரிப்பலை!
பெர்த்: தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில் இந்திய வீரர் யுவேந்திர சாஹல் தனது குசும்பு தனத்தை அம்பயர்களிடம் காட்டிய வீடியோ இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்களை மட்டுமே குவித்தது.

சீரியஸ் சம்பவம்
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோகித் (15), கே.எல்.ராகுல் (9), விராட் கோலி (12), தீபக் ஹூடா (0), தினேஷ் கார்த்திக் (6) அடுத்தடுத்து விக்கெட்டாகி ஏமாற்றினார். தனி ஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசினார். இவரின் இந்த அதிரடி ஆட்டம் இந்தியாவை 133 ரன்கள் வரை கொண்டு சென்றது.

சிரிப்பலை சம்பவம்
ஆட்டம் முழுவதும் இந்திய ரசிகர்கள் மிகவும் சீரியஸாக இருந்த சூழலில் அவர்களுக்கு ஏற்ற சிரிப்பு விருந்தை வழங்கினார் யுவேந்திர சாஹல். ஆட்டத்தின் தொடக்கத்தில் பார்னல் வீசிய பந்து கே.எல்.ராகுலின் உயிர் நாடி அருகில் பட்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் களத்திலேயே மண்டியிட்டு தவித்துக்கொண்டிருந்தார். அப்போது பிசியோதெரபிஸ்ட்கள் உள்ளே வந்து சிகிச்சை அளித்தனர்.

சாஹல் செய்த விஷயம்
அப்போது வீரர்களுக்கு ட்ரிங்க்ஸ் கொடுக்க வந்த யுவேந்திர சாஹல், கள அம்பயர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கே.எல்.ராகுலுக்கு பட்டதை போலவே உங்களுக்கும் அடி விழ வைக்கிறேன் எனக்கூறி அம்பயரின் உயிர் நாடியை பார்த்து உதைக்க நினைத்தார். இது போதாது என்று நினைத்து கையை வைத்தும் குத்த நினைத்தார்.

இணையத்தில் சிரிப்பலை
வேடிக்கையாக நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. களத்திற்கு வெளியே இருந்து குசும்பு தனங்களை செய்துக்கொண்டிருந்த யுவேந்திர சஹால் தற்போது அம்பயர்களையும் வம்பிழுத்து வருகிறார் எனக்கூறி ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications