Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை அணியில் புறக்கணிப்பு.. இந்தியாவே வேண்டாம்.. இங்கிலாந்து செல்லும் சாஹல்!

மும்பை: ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் சாஹல், இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் முதன்மையான வீரர் சாஹல். இவரை தவிர்த்ததன் விளைவாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை இருமுறை இழந்துள்ளது. தற்போது ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடரிலும் சாஹலை தேர்வு செய்யாமல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புறக்கணித்துள்ளார்.

Yuzvendra Chahal to play for Kent in the County Championship

அண்மையில் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் 121 விக்கெட்டுகளையும், 72 டி20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்திய ஆடுகளங்களில் ஸ்பின்னர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சாஹலின் லைன் மற்றும் லெந்த் மிகச்சிறந்த பாடமாக இருக்கும்.

சில நேரங்களில் கூக்ளி பந்துகளை வீசுவதில் சொதப்பினாலும், முக்கியமான சூழல்களில் சாஹலின் செயல்பாடுகள் வேறு மாதிரி இருக்கும். இவரை உலகக்கோப்பை அணியில் புறக்கணித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட கோபத்தில் சாஹலை டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்க உள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்றும் வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் கெண்டி அணிக்காக விளையாட சாஹல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கெண்டி அணி விளையாடவுள்ள கடைசி 3 போட்டிகளில் விளையாடுவதற்காகா சாஹல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாஹல் பேசுகையில், இது மிகப்பெரிய சவால் தான். இங்கிலாந்து ஆடுகளம் மற்றும் பிட்சில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். கவுண்டி போட்டிகளில் விளையாடுவதற்காக ஆவலாக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ரஞ்சி டிராபி தொடரிலேயே 2 போட்டிகளில் மட்டுமே யுஸ்வேந்திர சாஹல், திடீரென கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது இந்திய ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாஹல் இதுவரை இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 7, 2023, 19:20 [IST]
Other articles published on Sep 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+