Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்.. தோனி எடுத்த அதிரடி முடிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை தங்களது புதிய தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசன் முதல் அவர் இந்த புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அனுபவம் வாய்ந்த ஜாகீர் கான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zaheer khan

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக 16 ஆண்டு காலமாக நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் பிளமிங் செயல்பட்டு வந்தார். இந்த சூழலில் சிஎஸ்கே அணி கடைசி மூன்று சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை எடுத்து அவர் அந்த பதவியில் இருந்து விலகினார். இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளராக பேட்டிங் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் மைக்கேல் ஹசியே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹஸி, மார்கன் கிடையாது.. இந்த 49 வயது இந்திய வீரர் தான் சிஎஸ்கே அடுத்த பயிற்சியாளர்

ஹஸி, மார்கன் கிடையாது.. இந்த 49 வயது இந்திய வீரர் தான் சிஎஸ்கே அடுத்த பயிற்சியாளர்

அதன் பிறகு சிஎஸ்கே அணிக்கு இந்தியாவை சேர்ந்த வீரர் தான் பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று தோனி கூறியதாகவும் அதற்கு ஹேமாங் பதானி முதல் சாய்ஸாக இருப்பார் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக விளங்கி வந்த ஜாஹீர் கான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவுக்காக 14 ஆண்டுகள் ஜாகிர் கான் விளையாடி 2011 உலக கோப்பையை பெற முக்கிய காரணமாக இருந்தார். ஐபிஎல் தொடரில் ஜாகிர் கான் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி குழுவில் இணைந்து இருக்கிறார். அப்போது மும்பை அணி 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றது.

அதன்பிறகு ஜாகிர் கான், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியுடன் மென்டராக பணியாற்றி வந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு விலகினார். ஜாகிர் கான் ஒரு சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என்பதால் அவர் சிஎஸ்கே அணியின் பௌலர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

சிஎஸ்கே அணி இந்த 35 வயதான தமிழக வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும்.. அஸ்வின் கருத்து

Also Read

சிஎஸ்கே அணி இந்த 35 வயதான தமிழக வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும்.. அஸ்வின் கருத்து

ஆனால் ஜாகிர் கான் பேட்ஸ்மேன்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பார்? டி20 போட்டி மாறி வரும் நிலையில் அதற்கு ஜாகிர் கான் ஏற்ற சாய்ஸ் ஆக இருப்பாரா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. எனினும் ஜாகிர் காணும் தோனியும் நல்ல நண்பர்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜாகிர் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 311 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட்டில் 282 விக்கெட்களும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 17 விக்கெட்களும் கைப்பற்றி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டிகளில் ஜாகீர் கான் மொத்தமாக 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Monday, September 21, 2026, 18:39 [IST]
Other articles published on Sep 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+