Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாகீர் கான் ஆர்வமா இருக்காரு.. ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே விட மாட்டாங்க.. கணிக்கும் முன்னாள் வீரர்!

மும்பை: மும்பை அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் வாங்க சிஎஸ்கே அணியும், பயிற்சியாளர் ஜாகீர் கானும் ஆர்வமாக இருப்பதாக ஐதராபாத் அணியின் முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி கணித்துள்ளார். ஜாகீர் கான் மட்டுமல்லாமல் தோனி உடனான ஹர்திக்கின் உறவும் டிரேட் பின்னணியில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணி தங்களின் பயிற்சியாளர் குழுவை நியமனம் செய்து முடித்துவிட்டது. ஜாகீன் கான் கீழ் துணைப் பயிற்சியாளர்களாக கரேத் பேடி, ஆல்பி மோர்க்கல், ஸ்ரீதரன் ஸ்ரீராம், பவுலிங் பயிற்சியாளராக மோகித் சர்மா, ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சிஎஸ்கே அணி அடுத்ததாக டிரேட்டில் கவனம் செலுத்தி வருகிறது.

Hardik Pandya

குறிப்பாக ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டி இருக்கிறது. 3 நாட்களுக்கு முன் சிஎஸ்கே அணி தங்களின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே கேகேஆர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ஹர்திக் பாண்டியாவை வாங்க ஆர்வம் காட்டினாலும், மும்பை அணி எந்த பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வருகிறது.

இருப்பினும் ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இருந்து வெளி வர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இதுதொடர்பாக ஐதராபாத் அணியின் முன்னாள் வீரர் ஹனுமா விஹாரி பேசுகையில், சிஎஸ்கே அணி தனது பயிற்சியாளர் குழுவை மொத்தமாக மாற்றி இருக்கிறது. அணியிலும் சில மாற்றங்களை செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஹர்திக் பாண்டியா டிரேட் தான் இப்போது சுவாரஸ்யமானதாக மாறியுள்ளது. ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதி என்று சில தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தோனி - ஹர்திக் பாண்டியா உறவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை சூழல் மோசமாக மாறினால் மட்டுமே அவர் சிஎஸ்கே அணியை மிஸ் செய்ய வேண்டிய நிலை வரலாம்.

ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வந்தால், அது மிகச்சிறந்த விஷயம். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில் ஜாகீர் கான் தீவிரமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே மும்பை அணியில் இருந்த போது ஜாகீர் கான் - ஹர்திக் பாண்டியா இடையில் நல்ல உறவு இருந்தது. இதனால் ஹர்திக் பாண்டியா டிரேட் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, October 29, 2026, 18:41 [IST]
Other articles published on Oct 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+