Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜாகீர் கானை லக்னோ கழற்றிவிட்டது ஏன்? கோயங்கா மீது பாயும் விமர்சனம்.. ஜாஃபர், கைஃப் காரசார கருத்து

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை கழற்றிவிட்டது ஏன் என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. தொழிலதிபர் சஞ்சீவ் கோயங்காவின் லக்னோ அணியில் இருந்து ஜாகீர் கான் வெளியேறிய விவகாரம் குறித்து முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர் மற்றும் முகமது கைஃப் விரிவாகப் பேசியுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இந்த முடிவைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக வாசிம் ஜாஃபர் தெரிவித்தார். "ஜாகீர் கான் போன்ற மிகச் சிறந்த கிரிக்கெட் மூளையும், அமைதியான குணமும் கொண்ட ஒருவரை லக்னோ அணி எப்படி போக அனுமதித்தது என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. வழக்கமாக வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கே முன்னுரிமை தரப்படும் சூழலில், தகுதியான ஒரு இந்தியருக்கு சிஎஸ்கே நிர்வாகம் தலைமைப் பதவி வழங்கியது மிகச் சிறந்த முடிவு" என்று வாசிம் ஜாஃபர் பாராட்டியுள்ளார்.

Zaheer Khan LSG Exit slammed by Wasim Jaffer amp amp Mohammad Kaif after becoming CSK coach

அதே சமயம் முகமது கைஃப் சில சவால்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். "லக்னோ அணியில் வழிகாட்டியாக இருந்தபோது ஜாகீர் கானால் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற்றுத்தர முடியவில்லை. எனவே சிஎஸ்கே அணியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.

முன்பு ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக இருந்த போது தோனி முழு பலத்துடன் களத்தில் விளையாடினார். ஆனால் இப்போது களத்தில் ஒரு பேட்டராக தோனியின் பங்களிப்பு மிகவும் குறைந்துவிட்டது. அத்துடன் சமீபத்திய சீசன்களில் அடுத்தடுத்து பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து தவிக்கும் சிஎஸ்கே அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு மாற்ற வேண்டிய அழுத்தமும் ஜாகீர் கானுக்கு உள்ளது" என்று கைஃப் கூறியுள்ளார்.

அடியோடு மாறப்போகும் சிஎஸ்கே.. பிளெமிங்கை நீக்கிவிட்டு ஜாகீர் கானை தோனி தேர்வு செய்த பின்னணி

அடியோடு மாறப்போகும் சிஎஸ்கே.. பிளெமிங்கை நீக்கிவிட்டு ஜாகீர் கானை தோனி தேர்வு செய்த பின்னணி

கடந்த 2017-ல் இந்திய அணியின் ஆலோசகராகவும், 2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜாகீர் கான், தனது பழைய நண்பரான தோனியுடன் இணைந்து சிஎஸ்கே அணியை எவ்வாறு வழிநடத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Story first published: Friday, September 25, 2026, 17:09 [IST]
Other articles published on Sep 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+