ஒரு பக்கம் மெக்ராத்.. இன்னொரு பக்கம் ஜாகிர் கான்.. பிசிசிஐ அதிரடி பிளான்.. யாருக்கு லக் அடிக்கும்!
Recommended Video
டெல்லி: இந்திய அணியின் புதிய பவுலிங் கோச்சாக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமான இரண்டு முன்னாள் பவுலர்களை பிசிசிஐ தற்போது பரிசீலனையில் வைத்து இருப்பதாக தெரிகிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்கள் பதவிக்கு புதிய நபர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ இணையத்தில் வெளியிட்டு உள்ளது.
தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர், மற்ற நிர்வாகிகள் ஆகியோரை தேர்வு செய்ய வெளிப்படையாக விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு இந்த மாதம் 30ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

என்ன அவகாசம்
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், முன்னாள் இந்திய வீரர் அனுஷ்மான் கேக்வாட், முன்னாள் பெண்கள் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வார்கள். ஆனால் இவர்கள் பவுலிங், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். இவர்களை பிசிசிஐ தலைமை நிர்வாகிகள் நேரடியாக தேர்வு செய்வார்கள்.

யார் இருக்கிறார்
தற்போது இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக பாரத் அருண் இருக்கிறார். இவரின் வருகைக்கு பின் இந்திய அணியின் பவுலிங் அதிக அளவில் மாற்றம் அடைந்தது. பும்ரா இவருக்கு கீழ்தான் உலகின் நம்பர் ஒன் பவுலராக உருவெடுத்தார். அதேபோல் ஷமி, புவனேஷ்வர்குமார் ஆகியோரை பட்டை தீட்டியதும் இவர்தான்.

மாற்று
அருணுக்கு சரியான மாற்று கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் இவருக்கு பதிலாக இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக ஜாகிர் கான் அல்லது ஆஸ்திரேலிய முன்னாள் பவுலர் கிளைன் மெக்ராத் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள். இவர்கள் இருவரின் பெயரை பிசிசிஐ அமைப்பு பரிசீலனையில் வைத்துள்ளது.

ஏன் இவர்கள்
ஜாகிர் கான் ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பை அணிக்கு ஐபிஎல் சமயத்தில் பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேபோல் மெக்ராத் சென்னையில் தனியார் பயிற்சி மையம் ஒன்றில் தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் பெரும்பாலும் பயிற்சியாளர் ஆகும் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications