Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் இந்திய அணியில் ஜாகிர் கான்.. தெ.ஆ. பயணத்துக்குத் தேர்வு

வதோதரா: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜாகிர்கான் மீண்டும் திரும்பியுள்ளார். பெரும் இடைவெளிக்குப் பின்னர் ஜாகிர் திரும்பியுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பங்கேற்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜாகிர் கானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

17 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியை தேர்வார் குழு இன்று அறிவித்துள்ளது.

கம்பீர், ஷேவாக் இல்லை

கம்பீர், ஷேவாக் இல்லை

டெஸ்ட் அணியில் அம்பட்டி ராயுடுவும் இடம் பெற்றுள்ளார். அதேசமயம், கம்பீர், ஷேவாக் வழக்கம் போல இடம் பெறவி்லை.

ஜாகிர் மீது எதிர்பார்ப்பு

ஜாகிர் மீது எதிர்பார்ப்பு

35 வயதான ஜாகிர்கான் வருகைதான் முக்கியமான விஷயம். இதுவரை 88 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜாகிர் கான், கடந்த 2012 டிசம்பர் முதலே இந்திய அணியில் இடம் பெறவில்லை. காயம், பிட்னஸ் இல்லாமை என பல காரணங்களால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலை காணப்பட்டது.

300 டெஸ்ட் விக்கெட்டுக்குப் பக்கத்தில்

300 டெஸ்ட் விக்கெட்டுக்குப் பக்கத்தில்

300 டெஸ்ட் விக்கெட்களை நெருங்கியுள்ள ஜாகிர்கான் அதைச் சாதிக்க இன்னும் 5 விக்கெட்களையே எடுக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாஹாவும்

சாஹாவும்

மேற்கு வங்கத்தின் விருத்திமான் சாஹா, ரிசர்வ் விக்கெட் கீப்பராக டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஷாந்த்தும்

இஷாந்த்தும்

இஷாந்த் சர்மா நல்ல பார்மில் இல்லாவிட்டாலும் கூட அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்து உள்ளே இழுத்துப் போட்டுள்ளனர். ஸ்பின்னர்கள் என்று பார்த்தால் அஸ்வின், பிரக்யான் ஓஜா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.

3 ஒரு நாள் போட்டி- 2 டெஸ்ட்

3 ஒரு நாள் போட்டி- 2 டெஸ்ட்

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அங்கு, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. சச்சின் ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணி வெளிநாடு ஒன்றுக்குப் போவது இதுவே முதல் முறையாகும்.

ஜோஹன்னஸ்பர்க்கில்

ஜோஹன்னஸ்பர்க்கில்

ஒரு நாள் போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க்கில் டிசம்பர் 5ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் அதே ஜோஹன்னஸ்பர்க்கில் டிசம்பர் 18ம் தேதி தொடங்கும்.

ஒரு நாள் அணி

ஒரு நாள் அணி

கேப்டன் டோணி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே, ஆர்.அஸ்வின், புவனேஸ் குமார், அமித் மிஸ்ரா, அம்பட்டி ராயுடு, மோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, முகம்மது சமி, உமேஷ் யாதவ்.

டெஸ்ட் அணி

டெஸ்ட் அணி

கேப்டன் டோணி, தவன், கோஹ்லி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அம்பட்டி ராயுடு, முரளி விஜய், சட்டேஸ்வர் புஜாரா, ரஹானே, ஆர்.அஸ்வின், புவனேஸ் குமார், உமேஷ் யாதவ், விருத்திமான் சாஹா, ஜாகிர் கான், முகம்மது சமி, பிரக்யான் ஓஜா, இஷாந்த் சர்மா.

Story first published: Monday, November 25, 2013, 15:11 [IST]
Other articles published on Nov 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+